பாவங்கள் தீர சொல்ல வேண்டிய மந்திரம்!

52

பாவங்கள் தீர சொல்ல வேண்டிய மந்திரம்!

நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீர மனம் உருகி வித்யா தேவியை தொழுது இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.

பாவங்கள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்:

மங்கலை செங்கலை, சம்முலையாள், மலையாள் வருணச்

சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்

பிங்கலை நீலி செய்யாள், வெளியாள் பசும்பெண் கொடியே!

மந்திரத்தின் பொருள்:

மங்கலத்தை தருபவள் அன்னை அபிராமி தேவி. செம்மையான கலசம் போன்ற தனங்களை கொண்டவள். மலைமகளாக பிறந்தவள். சிவந்த திருக்கரங்களை கொண்டவள். சகல கலைகளையும் தந்து அருள்பவள். கங்கை உதிக்கும் இடமான சடாமுடியை கொண்ட பரமனின் இடப்பாகத்தை தனதாக்கிக் கொண்டவள். நீல நிற காளி, செந்நிறம் கொண்ட ல்லிதாம்பிகை, வெண்ணிறம் படைத்த வித்யா தேவி. பச்சை நிறம் கொண்ட உமா தேவி.