பிரதோஷ தினத்தன்று சொல்ல வேண்டிய பிரதோஷ மந்திரம்!

87

பிரதோஷ தினத்தன்று சொல்ல வேண்டிய பிரதோஷ மந்திரம்!

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே

அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

இம்மந்திரத்தை மாதத்தில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களிலும் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல் சமர்ப்பித்து விட்டு சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி சிவ பெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது 9 முறை அல்லது 11 முறை கூறி வழிபட வேண்டும்.

பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு உங்களை அறியாமல் செய்த தீங்கினால் உங்களுக்கு மனதளவில் கொடுக்கப்பட்ட சாபங்கள் நீங்கும். பொதுவாக சிவபெருமானை வழிபடுவதற்கு எல்லா நாட்களும் சிறந்த நாட்கள் என்றாலும், அந்த சிவ பெருமானுக்கே உரிய “பிரதோஷம்” தினத்தன்று சிவனையும், அவரின் வாகனமான “நந்தி” தேவரையும் வணங்குவது பல நன்மைகளை அள்ளி தரும்.