பிரிந்தவர்கள் ஒன்று சேர திரிபுர சுந்தரி மந்திரம்!

171

பிரிந்தவர்கள் ஒன்று சேர திரிபுர சுந்தரி மந்திரம்!

இன்றைய காலகட்டத்தில் புரிதல் என்பது சற்று குறைந்து வருகிறது. புரிதல் இல்லாததால் கணவன் – மனைவிக்கிடையே பிரிவு, நண்பர்களுக்கிடையே மோதல், அண்ணன் – தம்பி பிரிவு, குடும்பத்தில் பிரிந்தார்கள் என்று பலரும் பிரிந்து சென்றுவிடுகிறார்கள். அதன் பிறகு ஒன்று சேர்வதில் தான் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. யாரும் விட்டுக் கொடுத்து செல்வதும் இல்லை.

திருமணமான தம்பதிகளுக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லும் குணம் இருப்பதில்லை. இதனால், வீண் வாக்குவாதங்கள் தான் ஏற்படுகிறது. இதுவே நிரந்தர பிரிவுக்கு காரணமாக அமைகிறது. பிரிந்த கணவன் – மனைவியை ஒன்று சேர்ப்பதற்கும், குடும்பத்தில் பிரிந்தவர்கள், மாமன் – மச்சான் பிரிவு, அண்ணன் – தம்பி பிரிவு என்று அனைவரையும் ஒன்று சேர்க்க திரிபுர சுந்தரி மந்திரத்தை சொல்லி வந்தாலே போதும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது நம்பிக்கை.

தினமும், இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வந்தாலே அனைத்தும் நலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அது என்ன மந்திரம் என்று இங்கு காண்போம்…

திரிபுர சுந்தரி மந்திரம்:

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்

பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – பனி மலர்ப் பூங்

கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

அணையும், திரிபுர சுந்தரி – ஆவது அறிந்தனமே!

பொருள்:  எனக்கு துணையாகவும் நான் தொழும் தெய்வமாகவும், என்னை பெற்ற தாயாகவும் இருப்பவளே! வேதங்களின் வேராகவும், இலைகளாகவும், கிளைகளாகவும் இருப்பவளே! குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கையில் ஏந்தியிருக்கும் அன்னை திரிபுர சுந்தரியே உந்தன் மகிமை நான் அறிந்து கொண்டேன்…