பீடை விலக சொல்ல வேண்டிய மந்திரம்!

274

பீடை விலக சொல்ல வேண்டிய மந்திரம்!

இன்பம், துன்பம் இரண்டும் கலந்த து தான் வாழ்க்கை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்பமாக இருக்கும் போது எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோமோ அதே போன்று துன்பமாக இருக்கும் போதும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எது நடந்தாலும், துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றி காண வேண்டும். அதற்கு மன வலிமை வேண்டும். மன தைரியமும், உறுதியும் பெற வேண்டுமென்றால் அதற்கு துர்க்கை அம்மன் வழிபாடு நமக்கு கை கொடுக்கும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்யும் போது, மஞ்சள் தண்ணீர் கொண்டு பூஜித்து வழிபாடு செய்து வந்தால் வீட்டிலுள்ள துஷ்ட சக்திகள் யாவும் நீங்கும். சிறிய செம்பு பாத்திரம் நிரம்ப நல்ல தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், கொஞ்சமாக மஞ்சள் தூள் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். துளசி கிடைத்தால் இரண்டும், வேப்பிலை கிடைத்தால் இரண்டு வேப்பிலையை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தீர்த்தத்தை பூஜை அறையின் முன்பாக வைத்து விட வேண்டும். பூஜையை முடித்துவிட்டு இந்த செம்பு தண்ணீரை கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 3 முறை சொல்ல வேண்டும்.

ஓம் ஹ்ரீம் தும் துர்க்காய சர்வாகர்ஷணாய ஹ்ரீம் தும் பட்

இந்த மந்திரத்தை 3 முறை சொல்லி முடித்ததும் கையில் வைத்திருக்கும் தீர்த்த த்தை துர்க்கை அம்மனை நினைத்துக் கொண்டு வீடு முழுவதும் மூலை முடுக்குகளில் தெளித்து விட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக உங்களது வீடுகளில் கெட்ட என்ணங்கள் கொண்டவர்கள் வந்து சென்றிருந்தாலும் சரி, துர் சக்தி இருந்தாலும் சரி இந்த தீர்த்தம் பஸ்பமாக்கிவிடும். எல்லா சுப நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடக்கும்.