பேரும், புகழும் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

167

பேரும், புகழும் சேர, சொல்ல வேண்டிய மந்திரம்!

இறைவனுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. எவன் ஒருவன் இறைவன் மீது அதிக பக்தி கொண்டிருக்கானோ அவனுக்கு இறைவன் அனைத்தையும் கொடுப்பார். பொன், பொருள், செல்வம் என்று அனைத்தும் மீது அனைவருக்கும் ஆசை உண்டு. அப்படி அனைத்தையும் பெறுவதற்கு நம் வீட்டில் பூஜையறையில் சொல்ல வேண்டிய மந்திரம் இது.

இன்று செவ்வாய்க் கிழமை முருகனுக்கு உகந்த நாள். அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று வீட்டு பூஜையறையில் இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள். உங்களுக்கு பேரும், புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம். கூடவே விநாயகர் மந்திரமும் சொல்லுங்கள். ஏனென்றால், இன்று சங்கடஹர சதுர்த்தி.

இந்த நாளில் விரதம் இருந்து அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று சங்கடஹர சதுர்த்தி மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபட்டு வாருங்கள். உங்களுக்கு வேண்டிய வரம் தந்தருள்வார்…

விநாயகர் வழிபாடு:

ஐந்து கரத்தனை யானை முகத்தானை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்று கின்றேனே.

முருகன் வழிபாடு:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய் கதிராய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

சக்தி வழிபாடு:

உதிக்கின்ற செங்கதிர்! உச்சித்திலகம்! உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது! மலர்க்க மலை!

துதிக்கின்ற மின்கொடி! மென்கடிக்குங்கும தோயம் என்ன

விதிக்கின்ற மேனி! அபிராமி எந்தன் விழித்துணையே!

சிவன் வழிபாடு:

நம் மானம் மாற்றி நமக்கருளாய் நின்ற

பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை

அம்மானை அந்தனர் சேரும் அணிகாழி

எம்மானை ஏத்தவல் லார்க்கு இடர் இல்லையே.

இராமன் வழிபாடு:

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம வென்றி ரண்டு டெழுத்தினால்

வீட்டில் பூஜை செய்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் உங்களுக்கு பேரும், புகழும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.