மனதை வசியப்படுத்தும் அற்புத மந்திரம்!

40

மனதை வசியப்படுத்தும் அற்புத மந்திரம்!

எந்தவொரு காரியத்தையும் முழு மனதோடு செய்ய வேண்டும். முழு மனதோடு செய்யும் காரியம் மட்டுமே வெற்றி பெறும். சாமி கும்பிடுவதற்கு கோயிலுக்கு சென்று அங்கு போய் வேறு யோசனையில் இருப்பது, வியாபாரம் செய்யும் இடத்தில் வீட்டு யோசனை இருப்பது போன்ற பல பிரச்சனைகளுக்கு மனதை ஒருநிலைபடுத்தாதது தான் காரணம். அப்படி மனதை ஒருநிலைப்படுத்த, வசியப்படுத்த இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

மனதை வசியப்படுத்துவதற்கான மந்திரம்:

ஓம் மருமலர் வாசினி சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி

மனோவசியம் குரு குரு சுவாஹா

இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை சொல்லிவிட்டு எந்த காரியமும் செய்தால் மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு அந்த காரியம் வெற்றி பெறும். மேலும், வேறு ஏதேனும் மந்திரம் சொல்வதாக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு சொன்னால், அந்த மந்திரத்தின் முழு பயனும் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வளவு ஏன், கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு முன்னதாக, இந்த மந்திரத்தை சொன்னால், மனது வசியப்படுத்தப்பட்டு, ஒருநிலைபடுத்தப்பட்டு முழு மனதோடு இறைவனை தரிசிக்க முடியும். அதன் மூலமாக இறைவனின் பரிபூரண அருளும் நமக்கி குடைக்கும்