மனோ வியாதி நீக்கும் அற்புத மந்திரம்!
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…..வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப் பெருமான் கை வேலை வணங்கி வழிபாடு செய்யலாம்.
இதையும் படியுங்கள்: இதென்ன புதுசா இருக்கே…! தண்ணீர் மனிதர்களுடன் பேசுமா?
மந்திரம்:
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ
பொருள்:
ஓம் சக்தியான வேல், இந்த உலகத்திற்கு தாயானவளே, அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே, உன்னை வணங்குபவரின் மனோ வியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் விளக்கம். முருகப் பெருமான் தனது கையில் வைத்திருக்கும் வேல்-ஐ வணங்கி வழிபாடு செய்தால், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.