மரண பயம் போக்கும் எமன் காயத்ரி மந்திரம்!

104

மரண பயம் போக்கும் எமன் காயத்ரி மந்திரம்!

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை சொல்லி வேண்டும்.

எமன் காயத்ரி மந்திரம்:

“ஓம் சூரிய புத்ராய வித்மஹே

மகா காலாய தீமஹி

தந்நோ யம ப்ரசோதயாத்”

பொதுவான பொருள் : “சூரிய பகவானின் புத்திரரும், காலத்தின் அம்சமான எமதர்மரின் அருள் எனக்கு கிடைக்க, அவர் பாதம் பணிகிறேன்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும். மேலும் அதே சனிக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று, நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனிபகவானின் சகோதரனான யமதர்மனுக்குரிய இம்மந்திரத்தை கூறி வழிபட, இந்த இரு தேவர்களின் அருளால் உங்களுக்கு ஆயுள் விருத்தியாகும். மரணத்தை குறித்த தேவையற்ற பயங்கள் நீங்கும்.