மஹா சங்கடஹர சதுர்த்தி: கஷ்டங்கள், கடன் தீர விநாயகர் மந்திரம்!

77

மஹா சங்கடஹர சதுர்த்தி: கஷ்டங்கள், கடன் தீர விநாயகர் மந்திரம்!

விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி மிகவும் விஷேசமான வழிபாடு. சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை நினைத்து விரதமிருந்து முறையாக யார் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்பட பல தோஷங்கள் நீங்கும். அதோடு, கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். கஷ்டங்கள் தீரும்.

சங்கடம் என்றால் துன்பம். ஹர (கர) என்பதற்கு அறுப்பவன் என்று பொருள். சதுர்த்தி என்றால் அமாவாசை, பெர்ணமிக்கு பின்னர் வரும் நான்காவது நாள் என்று பொருள். விரதமிருந்து வழிபடும் போதும் சங்கடங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் யாவையும் விநாயகப் பெருமான் அழிப்பார். இதுவே சங்கடஹர சதுர்த்தி நாளாகும். இந்த நாளில் விநாயகருக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபட்டு வர வேண்டிய வரம் கிடைப்பதோடு, நினைத்த காரியம் முடியும் என்பது ஐதீகம்.

சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

பொருள்:

பக்தர்கள் வேண்டிய வரத்தை வழங்கும் சங்கடஹர கணபதியே வணங்குகிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. மக்களை எப்போதும் துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே உம்மை வணங்குகிறேன்.

இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானின் இந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கடன் பிரச்சனை தீரும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

இந்த ஸ்லோகத்தை சொல்வதன் மூலமாக எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நினைத்த காரியங்கள் வெற்றியில் முடியும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய தடைகள் நீங்கும். கடன் தொல்லை தீரும்.