வரலட்சுமி விரதம் இருக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

157

வரலட்சுமி விரதம் இருக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

திருமணமான சுமங்கலிப் பெண்கள், தங்களது தாலி பாக்கியம் நிலைக்கவும், மாங்கல்ய பலம் பெருகவும், குடும்பத்தில் சுபீட்சம் உண்டாகவும், கன்னிப் பெண்களின் மனதிற்கு பிடித்த வரன் அமையவும் மகாலட்சுமியை முறையாக வீட்டிற்கு அழைத்து வழிபடுவது வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம்).

ஆவணி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், வட இந்தியாவிலும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

வரலட்சுமி விரதம் மந்திரம்:

பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்

கல்ய விவர்த்தினி

பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா

மாம்ச்ச தேஹிமே

வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு

வக்ஷஸ்தலஸ்த்திதே

வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்

சதேஹிமே

அஷ்ட லட்சுமிகளுடன்‌ வரலட்சுமியையும்‌ சேர்த்து 9 லட்சுமிகள்‌ என்பது சாஸ்‌திரம். இதனால், 9 நூல்‌ இழைகளால்‌ ஆன 9 முடிச்சுகள்‌ போட்ட நோன்புக்‌ கயிறை பூஜையில்‌ வைத்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு மஞ்சள் கயிறை (நோன்பு கயிறு) கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மனதிற்கு பிடித்த திருமண வாழ்க்கை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.