வருங்காலத்தில் நடக்க இருப்பதை தெரிந்து கொள்ள காளி மந்திரம்!

109

வருங்காலத்தில் நடக்க இருப்பதை தெரிந்து கொள்ள காளி மந்திரம்!

மிகவும் சக்தி வாய்ந்த உக்கிரமான தெய்வங்களில் காளி தேவியும் ஒன்று. காளி என்பதற்கு காலம் என்றும் கருப்பு என்றும் பெயர் உண்டு. காளனின் (ஈசன்) மனைவி தான் காளி. இவளே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். காலங்களை கட்டுப்படுத்தக் கூடியவர் தான் இந்த காளி தேவி. ஒருவரது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தானது பயம், எதிரிகள் தொல்லை. இந்த இரண்டுமே நமது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். இதிலிருந்து விடுபட காளி தேவி மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து வந்தால் எந்த பிரச்சனையும் வராது.

காளி மந்திரம் :

ஓம் காளி நமஹ;

ஓம் மாகாளி நமஹ;

ஓம் ஜெய காளி நமஹ;

ஓம் உக்கிர காளி நமஹ;

ஓம் உத்தண்ட காளி நமஹ;

ஓம் ஓங்கார காளி நமஹ;

ஓம் ஆஙகார காளி நமஹ;

ஓம் ருத்ர காளி நமஹ;

ஓம் நீலி நமஹ;

ஓம் சூலி நமஹ;

ஓம் திரிசூலி நமஹ;

ஓம் முப்புரத்து நீலி நமஹ;

ஓம் சங்கரி நமஹ;

ஓம் பயங்கரி நமஹ;

ஓம் பூரணி நமஹ;

ஓம் காரணி நமஹ;

ஓம் மோஹினி நமஹ;

ஓம் யோகினி நமஹ;

ஓம் வர்த்தினி நமஹ;

ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;

ஓம் ஆனந்த ரூபிணி நமஹ;

ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;

ஓம் பவானி நமஹ;

ஓம் பைரவி நமஹ;

ஓம் ஈஸ்வரி நமஹ;

ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;

ஓம் மந்தி தாரணி நமஹ;

ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;

ஓம் காளி !

ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!

அதிகாலை எழுந்து குளித்து முடித்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் எதிரிகள் தொல்லை இருக்கவே இருக்காது. வாழ்க்கையில் அடுத்தடுத்து முன்னேற்றம் உண்டாகும் என்பது ஐதீகம்.

மண்டை ஓட்டை கழுத்தில் மாலையாக அணிந்து பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக இருந்தாலும் காளியின் உள்ளம் எப்போதும் கருணை நிறைந்தது. அப்படிப்பட்ட காளியை பூஜித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினந்தோறும் சொல்லி வந்தால் எதிர்காலத்தில் நடக்கப் போவது முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தியை நம்மால் பெற இயலும் என்று நம்பப்படுகிறது.

காளி தேவி மூல மந்திரம்:

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம்

தக்ஷிணே காளிகே

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை முறையாக குருவிடம் சென்று கற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, மனமுருகி சரியான நேரத்தில் சரியான எண்ணிக்கையில் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நாம் அறிந்து கொள்ளும் சக்தி கிடைக்கும்.

மேலும், இந்த மந்திரம் சொல்வதன் மூலமாக வீட்டிலும் எந்த தீய சக்திகளும் நெருங்காது. ஞானமும், செல்வ நிலையும் உயரும். எதையும் சாதிக்கும் மன பக்குவமும், தைரியமும் அதிகரிக்கும்.