வறுமை நீங்கிச் செல்வம் பெருக சொல்ல வேண்டிய விநாயகர் அனுபூதி!
பொல்லா வறுமை, புரைசால் கொடுநோய்
எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவே
வல்லாய் வருவாய் வளமே தருவாய்;
உல்லா சமிளிர் ஒருகை முகனே!!
விளக்கம்:
அழகான துதிக்கையை உடையவனே! பாவங்களைச் செய்யத் தூண்டும் வறுமையையும், கொடிய நோய்கள் எல்லாவற்றையும் அழித்து என்னை ஆண்டு கொள்ள வல்லமை பெற்றவன் நீ ஒருவனே! எனக்கே வளங்களைத் தருவாய்.