விபத்துகளை தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம்!

77

விபத்துகளை தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம்!

உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆயுளும், ஆரோக்கியமும் தான் அவர்களின் பிறப்பை முழுமையடையச் செய்கிறது. என்னதான் வசதி, வாய்ப்புகள், அதிகாரம், பேரும், புகழும், அழகு என்று எல்லாம் இருந்தாலும் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் இல்லை என்றால், அதனை அனுபவிக்க முடியாமலே போய்விடும். தான் என்ற அகம்பாவத்தை அடக்குவதற்கு இறைவன் ஏதாவது ஒரு வழியை கையாள்வார்.

கல் தட்டி விழுந்து இறந்தவரும் உண்டு, 15 அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிர் பிழைத்தவரும் உண்டு. தன்னடக்கம், பணிவு கொண்டவருக்கு ஆயுளும், ஆரோக்கியமும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். எவன் ஒருவனுக்கு இறைவனின் ஆசியும், அருளும் இருக்கிறதோ அவனுக்கு எந்த குறையும் வராது.

கிரக நிலை மோசமடைந்துள்ள நிலையில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. அப்படியிருக்கும் போது விபத்துகளிலிருந்து தவிர்க்க கீழே உள்ள மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விபத்தை தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம்:

நமஸ்தே அஸ்து பகவன்!

விச்வேஸ்வராய மஹாதேவாய!

த்ரியம்பகாய த்ரிபுராந்தகாய!

த்ரிகாக்னி காலாய!!

காலாக்னி ருத்ராய நீலகண்டாய!

ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய!

ஸதாசிவாய ஸ்ரீமன்!

மஹாதேவாய நம!!