விஷத்தை முறிக்கும் கருடாழ்வார் மந்திரம்!

467

விஷத்தை முறிக்கும் கருடாழ்வார் மந்திரம்!

நாகத்தின் கொடிய விஷங்களை அடக்கி ஆள்பவர் யார் என்றால், அவர் தான் கருடாழ்வார். இறைவன் திருவடியை சரணடைந்து பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடாழ்வார், கொடிய விஷத்தை முறியடிக்கும் சக்தி கொண்டவராக திகழ்கிறார். பாம்பின் சீண்டலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்கள் அல்லது அவர்களது சார்பாக வேறு யாரேனும் ஒருவர் கருடாழ்வாரின் இந்த மந்திரத்தை 1008 முறை சொன்னால், நல்ல பலன் கிடைக்கும். பாம்பின் கொடிய விஷத்தை முறியடிக்கும் தன்மை கொண்ட கருடாழ்வாருக்கு கொடிய நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்று கூறப்படுகிறது.

கருடாழ்வாரின் இந்த மந்திரத்தை தினமும் கூறுபவர்களுக்கு எந்த நோயும் கிட்டவே நெருங்காது என்கிறது புராணம்.

மேலும் படிக்க: கடன் தீர மிளகு, வரமிளகாய் உடன் சிவன் தரிசனம்!

கருடாழ்வார் மந்திரம்:

அம்ருத கலச ஹஸ்தம், காந்தி ஸம்பூர்ண தேஹம்!

ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்!

விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்!

ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்: க்ஷிப ஓம் ஸ்வாஹா!

கருடாழ்வார் மந்திரத்தின் விளக்கம்:

அமிர்த கலசத்தை கையில் வைத்திருப்பவரே! அனைத்து தேவ, தேவியர்களால் துதிக்கப்படுபவரே! இவருடைய பெருமையை யாராலும் விவரிக்க முடியாது. இவரது இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடு நடுங்கச் செய்யும். இவரை வணங்கினால், பாம்பின் விஷம் கூட நீங்கும். அனைத்து வியாதிகளும் நீங்கும். பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன் என்பதாகும்.