வீட்டில் விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய பாடல்!

128

வீட்டில் விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய பாடல்!

வீட்டில் திருவிளக்கு ஏற்றும்போது தினமும் கூற வேண்டிய பாடல் . அனுதினமும் இந்த பாடலை காலையும் மாலையும் விளக்கேற்றி படித்தால் வீட்டிற்கு மிகவும் நன்மைபயக்கும் . தினமும் படிக்க இயலாதவர்கள் செய்வாய் வெள்ளியில்லாவது படித்தால் நன்மைபயக்கும்.

விளக்கே திருவிளக்கே வேதமுடன் நற் பிறப்பே

ஜோதி விளக்கே ஸ்ரீதேவி பெண்மணியே

அந்தி விளக்கே அலங்கார நாயகியே

காந்தி விளக்கே காமாட்சி தாயாரே

பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு

குளம் போல நெய்விட்டு கோலமுடன் ஏற்றினேன்

ஏற்றினேன் நெய் விளக்கு எந்தென் குடி விளங்க

வைத்தேன் திருவிளக்கு மாளிகையில் நான் விளங்க

மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு கொண்டேன்

மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாரும் அம்மா

சந்தான பிச்சையுடன் தனங்களையும் தாரும் அம்மா

பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா

பாட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா

அல்லும் பகலும் என் அண்டையிலே நிலுமம்மா

சேவித் தெளிந்து நின்றேன் தேவி வடிவம் கண்டேன்

வஜ்ர கிரிடம் கண்டேன் வைடுரி மேனி கண்டேன்

முத்து கொண்டை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன்

சபரி முடி கண்டேன் தாழ் மடல் சூடக் கண்டேன்

பின்னல் அழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்

சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவும் கண்டேன்

கமல திரு முகத்தில் கஸ்தூரி பொட்டும் கண்டேன்

காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீஃலீ கண்டேன்

மங்கள நாயகியே உன்னை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன்

அன்னையே அருந்துணையே அருதில் இருந்து காரும் அம்மா

வந்த வினை அகற்றி மகா பாக்யம் தாரும் அம்மா

தாயாரே உந்தன் தாழடியே சரணம் என்றேன்

மாதவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்

தந்தையும் தாயும் நீயே தற்காக்கும் ரட்சகி நீயே

அன்பருக்கு உதவும் நீயே ஆதாரமும் நீயே

உன்னை உறவாக நம்பி உற்றாரை கைவிட்டேன் தாயே

சந்தான சௌபாக்யம் தந்து சத்துக்கள் சேவை எனக்கு அளிப்பாய்

பக்தியுள்ளமனம் எனக்கு தந்து பரதேவி கிருபையுடனே அருள்வாய்.