வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீ வரலக்ஷ்மி தேவி நமஸ்காரம்!
- ஸ்ரீ பீடத்தில் வரலக்ஷ்மியாய் அமர்ந்திருப்பவளான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்
- வரங்களை அள்ளிக் கொடுப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- அழகிய கொலுமண்டபத்தில் பெருமையுடன் வீற்றிருப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- கலச ரூபமாக இருப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- சுமங்கலிகளால் விரதம் இருந்து பூஜிக்கபடுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- ஜயமின்றி தொழுபவர்களுக்கே ஜஸ்வர்யத்தை தந்து காப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- நாராயணனின் பிரிய நாயகியான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- நிறைவின் உருவானவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- தங்கத் தாமரையில் பொன்நிறத்தோடு பொலிவோடு திகழ்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- ஸ்ரீம்கார மந்திரத்தில் உறைபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- பலவித ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- மாங்கல்ய பலம் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- பாற்கடலில் உதித்து பாரெல்லாம் புகழ்திடவே வரம் தந்திடும் குலமகளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- நெல்லிக்கனியை பிரியமான நிவேதனப் பொருளாக ஏற்றுக் கொள்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- தன் கடாக்ஷம் உலகமெங்கும் வியாபித்திருக்க செய்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- தன்னை வணங்கும் அன்பர்களை தன் கடைக் கண்ணினாலே பார்த்து கைதூக்கி விடுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- நேசமிகு அன்பர் முன் நேரில் தோன்றுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- வில்வ அர்ச்சனையில் விருப்பமுள்ளவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- மங்குதல் இல்லாத ஜோதி மயமான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- சிறந்த பலன்களைத் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- நறுமண பன்னீரில் உறைபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- சந்தன குங்கும திலகத்தில் மகிழ்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- பிரதக்ஷண நமஸ்காரத்தில் சந்தோஷப்படுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- தன்னை வணங்குபவர்களுக்கு அருளோடு பொருளையும் வழங்குவதற்கு காத்திருப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- அகிலமெல்லாம் நிறைந்தவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- குலதனம் வேண்டுபவரின் குலமகளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- வணங்கினால் நல்வாழ்வு தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- செல்வத்தை தந்து செல்வாக்கும் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- சிரத்தையோடு பூஜித்தால் சித்தம் குறை போக்க ஓடி வருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- பண்போடு வணங்குவோர்க்கு பணத்தையும் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- பாடல்களில் மனம் மகிழ்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- நம்பினவர் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- அரவணைத்து ஆண்டருள் புரிபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- கண்ணின் மணியாய் ஒளிர்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- பூமணக்க பூஜை செய்வதை விரும்புபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- அபயம் என்று சரணடைந்தால் அடைக்கலம் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- வாசலிலே மாக்கோலம் போட்டால் வீட்டினிலே லக்ஷ்மி கடாக்ஷத்தை தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- ஆதரவு வேண்டி நின்றால் ஆனந்தத்தைத் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- மாவிலை தோரண அலங்காரத்தால் வசீகரிக்கப்படுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- மாதரின் குங்குமத்தில் ஒளிர்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- குபேர சம்பத்தின் உருவமானவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- வியாபார லாபத்தை விருத்தி செய்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- அழகிய வஸ்திரங்களால் அலங்கரிக்கபடுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- கலச கும்பத்திலே புண்ணிய தீர்த்த வடிவமாக அமர்ந்தவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
- கம்பீரத்துடன் வரலக்ஷ்மியாய் கலசத்தில் அமர்ந்திருப்பவளான ஸ்ரீ தேவி எங்கும் என்றும் எப்போதும் ஜெயத்துடன் விளங்க வேண்டும்.