வேண்டிய வரம் தரும் சைலபுத்ரி தேவியின் மந்திரம்!

131

வேண்டிய வரம் தரும் சைலபுத்ரி தேவியின் மந்திரம்!

நவராத்திரி முதல் நாளான பிரதமை திதியில் நவதுர்க்கையின் முக்கிய அம்சமான சைலபுத்ரி தேவியை வழிபடுகின்றனர். சைலபுத்ரி என்றால் மலைமகள் என்று பொருள். மலை அரசன் இமவானின் மகள் என்பதால், தேவிக்கு சைலபுத்ரி என்ற பெயர். இதைத் தொடர்ந்து சதி, பார்வதி, பவானி ஆகிய பெயர்களும் உள்ளன.

மேலும் படிக்க: நவராத்திரி முதல் நாள்: சைலபுத்ரி தேவி வழிபாடு!

ஹிமவானின் மகளாகவும் இருப்பதால், ஹேமாவதி என்ற பெயரும் இருக்கிறது. முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் தாட்சாயினி என்றும் அழைக்கப்படுகிறாள். இவளே பார்வதியாக பிறந்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் தந்தருள்கிறாள்.

சைலபுத்ரி தேவியின் தியான மந்திரம்:

வந்தே வாஞ்சித் லாபாய சந்திர கிருத சேகரம்

விருஷபாருடம் சூலதாரிநீம் ஷைல புத்ரீம் யஷஷ்விநீம்

நந்தியின் மேல் ஏரி வருபவள், சூலத்தை ஆயுதமாக கொண்டவள், மூன்றாம் பிறையைத் தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளாக திகழ்பவளே பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் ஷைல புத்ரி தேவியை வணங்குகின்றேன். சைலபுத்ரி தேவியின் கோயில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது.