வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

180

வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

கொரோனா லாக்டவுன் காரணமாக வேலையில் இருந்தவர்களும், இல்லாதவர்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டார்கள். கொரோனா காரணமாக பலரும் வேலை இழக்கவும் செய்தார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க மகாலட்சுமிக்கு உரிய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

மகாலட்சுமி மந்திரம்…

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா

விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச

ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ

இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், மகாலட்சுமியின் அருள் கிடைப்பதோடு, வேலையும் கிடைக்கும். சாமி பட த்திற்கு அடியில் புத்தம் வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறையும், வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் நெய் தீபம் ஏற்றி, பூஜை செய்து 108 முறையும் சொல்லி வந்தால் செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம்.