ஸ்ரீ நவக்கிரக வியாழ குரு பகவான் 108 போற்றி!

108

ஸ்ரீ நவக்கிரக வியாழ குரு பகவான் 108 போற்றி!

 1. ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி
 2. ஓம் அன்ன வாகனனே போற்றி
 3. ஓம் அயன் அதிதேவதையனே போற்றி
 4. ஓம் அபய கரத்தனே போற்றி
 5. ஓம் அரசு சமித்தனே போற்றி
 6. ஓம் அறிவனே போற்றி
 7. ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி
 8. ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
 9. ஓம் அறக் காவலே போற்றி
 10. ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
 11. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
 12. ஓம் ஆண் கிரகமே போற்றி
 13. ஓம் இருவாகனனே போற்றி
 14. ஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
 15. ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி
 16. ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி
 17. ஓம் உபகிரகமுடையவனே போற்றி
 18. ஓம் உதித்தியன் சோதரனே போற்றி
 19. ஓம் எளியோர்க் காவலே போற்றி
 20. ஓம் எண்பரித் தேரனே போற்றி
 21. ஓம் ஏடேந்தியவனே போற்றி
 22. ஓம் ஐந்தாமவனே போற்றி
 23. ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி
 24. ஓம் கடலை விரும்பியே போற்றி
 25. ஓம் கருணை உருவே போற்றி
 26. ஓம் கற்பகத் தருவே போற்றி
 27. ஓம் களங்கமிலானே போற்றி
 28. ஓம் கமண்டலதாரியே போற்றி
 29. ஓம் கடகராசி அதிபதியே போற்றி
 30. ஓம் கசன் தந்தையே போற்றி
 31. ஓம் கராச்சாரியனே போற்றி
 32. ஓம் காக்கும் தேவனே போற்றி
 33. ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
 34. ஓம் கிரகாதீசனே போற்றி
 35. ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி
 36. ஓம் குருபரனே போற்றி
 37. ஓம் குணசீலனே போற்றி
 38. ஓம் குருவே போற்றி
 39. ஓம் குரு பகவானே போற்றி
 40. ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி
 41. ஓம் சதுர பீடனே போற்றி
 42. ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
 43. ஓம் சான்றோனே போற்றி
 44. ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி
 45. ஓம் சிறுமையழிப்பவனே போற்றி
 46. ஓம் சுப கிரகமே போற்றி
 47. ஓம் செந்தூரில் உய்ந்தவனே போற்றி
 48. ஓம் செல்வமளிப்பவனே போற்றி
 49. ஓம் தனுர் ராசி அதிபதியே போற்றி
 50. ஓம் தங்கத் தேரனே போற்றி
 51. ஓம் தாரை மணாளனே போற்றி
 52. ஓம் த்ரிலோகேசனே போற்றி
 53. ஓம் திட்டைத் தேவனே போற்றி
 54. ஓம் தீதழிப்பவனே போற்றி
 55. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
 56. ஓம் தூயவனே போற்றி
 57. ஓம் தெளிவிப்பவனே போற்றி
 58. ஓம் தேவ குருவே போற்றி
 59. ஓம் தேவரமைச்சனே போற்றி
 60. ஓம் தேவர்குலக் காவலனே போற்றி
 61. ஓம் நல்லாசானே போற்றி
 62. ஓம் நற்குணனே போற்றி
 63. ஓம் நற்குரலோனே போற்றி
 64. ஓம் நலமேயருள்பவனே போற்றி
 65. ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி
 66. ஓம் நாற்கோணப் பீடனே போற்றி
 67. ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி
 68. ஓம் நாற்கரனே போற்றி
 69. ஓம் நீதிகாரகனே போற்றி
 70. ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி
 71. ஓம் நெடியோனே போற்றி
 72. ஓம் நேசனே போற்றி
 73. ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி
 74. ஓம் பாடியில் அருள்பவனே போற்றி
 75. ஓம் பிரஹஸ்பதியே போற்றி
 76. ஓம் பிரமன் பெயரனே போற்றி
 77. ஓம் பீதாம்பரனே போற்றி
 78. ஓம் புத்ர காரகனே போற்றி
 79. ஓம் புனர்வசு நாதனே போற்றி
 80. ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி
 81. ஓம் பூரட்டாதிபதியே போற்றி
 82. ஓம் பொற்குடையனே போற்றி
 83. ஓம் பொன்னாடையனே போற்றி
 84. ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி
 85. ஓம் பொன்னிற த்வஜனே போற்றி
 86. ஓம் மகவளிப்பவனே போற்றி
 87. ஓம் மணம் அருள்பவனே போற்றி
 88. ஓம் மமதை மணாளனே போற்றி
 89. ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி
 90. ஓம் முல்லைப் பிரியனே போற்றி
 91. ஓம் மீனராசி அதிபதியே போற்றி
 92. ஓம் யானை வாகனனே போற்றி
 93. ஓம் யோகசித்தி சோதரனே போற்றி
 94. ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி
 95. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
 96. ஓம் வடநோக்கனே போற்றி
 97. ஓம் வடதிசையனே போற்றி
 98. ஓம் வல்லவனே போற்றி
 99. ஓம் வள்ளலே போற்றி
 100. ஓம் வச்சிராயுதனே போற்றி
 101. ஓம் வாகீசனே போற்றி
 102. ஓம் விசாக நாதனே போற்றி
 103. ஓம் வேதியனே போற்றி
 104. ஓம் வேகச் சுழலோனே போற்றி
 105. ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
 106. ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
 107. ஓம் வியாழனே போற்றி
 108. ஓம் குருபகவானே போற்றி போற்றி…!