12 ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய பீஜமந்திரம்!

207

12 ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய பீஜமந்திரம்!

நாம் சாதாரணமாக வார்த்தைகளை பேசும் போதும், சொல்லும் போது ம் என்ற எழுத்தானது ங் என்று மாறுகின்றது. அதாவது ஓம் காரம் என்பது ஓங் காரம் என்றும் ரீம் காரம் என்பது ரீங் காரமாகவும் மாறுகின்றது. இதில், காரம் என்பதை வரிசை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு நாம் முதலில் சொல்லித் தருவது ங் என்ற எழுத்தை வைத்து பாலூங்கு பேசுவீங்களா, உங்கு பேசுவீங்களா, அங்கு, வங்கு, யங், வங் போன்ற பீஜ வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகிறோம். அதன் பிறகு தான் ம் என்ற எழுத்து சேர்ந்து அம்மா, ஓம், ஆமா போன்ற வார்த்தைகள் உச்சரிக்கப்படுகின்றன. ம் சேர்ந்த பீஜங்களை வாய பேச முடியாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

சித்தர்கள் முதல் அனைவரும் போற்றும் நன் மந்திரங்களுள் அங் என்ற பீஜ மந்திரமும் ஒன்று. இந்த மந்திரத்தை ஒருவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தால், அவர் சகல நன்மைகளையும் அடைவார் என்பது நம்பிக்கை. அங் என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது அது கங் என்று மாறி ஒலிக்கும். இது கணபதிக்கு உரிய மந்திரம். மேலும், கம் என்பது ஆகாயத்திற்குரிய நாதம். அந்த நாதத்தின் மூலமாக ஆகாயத்தின் ரகசியங்களை கற்றுக்கொள்கின்றான்.

அதோடு, ஆகாயத்தில் என்னென்ன இருக்கிறதோ, அவைகளின் நாத ஒலிகளும் கேட்கத் தொடங்கி அவைகளின் ரகசியங்களும் கற்றுத் தரப்படுகிறது. ஒவ்வொரு விதமான மந்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. உண்மையில் யார் ஒருவர் தொடர்ந்து ஒரே மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறாரோ அவருக்கு அந்த மந்திரத்தின் முழுமையான பலன் கிடைப்பதோடு, இல்லறத்தில் சகல நன்மைகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

சரி, இனி, 12 ராசிகளுக்கான பீஜமந்திரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்…

12 ராசிகளுக்கான பீஜமந்திரம்:

 1. மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
 2. ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
 3. மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்
 4. கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
 5. சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
 6. கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
 7. துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
 8. விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
 9. தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
 10. மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
 11. கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
 12. மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

ராசி தெரியாதவர்கள்:

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

ஓம் சிவாய நம என முடிக்கவும். இந்த மந்திரத்தை ஒவ்வொரு நாளும் 108 முறை சொல்லி வந்தால் சகல விதமான நன்மைகளும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.