உங்கள் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுத்து தரும் மந்திரம்

177

தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு கார்த்த வீர்யார்ஜுனா என்று இவரின் பெயரை உச்சரித்து, பின் வரக்கூடிய மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும் இழந்த எல்லாவற்றையும் சுலபமாக மீட்டெடுத்து விடலாம்.

உங்கள் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுத்து தரும் மந்திரம்
கார்த்த வீர்யார்ஜுன்
தினமும் காலையில் எழுந்து, சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு கார்த்த வீர்யார்ஜுன என்று இவரின் பெயரை உச்சரித்து, பின் வரக்கூடிய மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் சுலபமாக மீட்டெடுத்து விடலாம். அதற்கான வழியை நிச்சயம் உங்களுக்கு இந்த கார்த்த வீர்யார்ஜுன சுவாமி காட்டுவார் என்பதில் துளி அளவும் சந்தேகம் கிடையாது. உங்களுக்கான கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம் இதோ!

கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம்:

அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந்
மயோதிதம் ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ
நாம ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் யஸ்ய
ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

நம்பிக்கையோடு இவரை மனதார அழைத்து வழிபடுபவர்களுக்கு இவருடைய ஆயிரம் கைகள் பாதுகாப்பு அரணாக அமையும். உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்களை, தடுக்கக்கூடிய சக்தி இவருக்கு உண்டு. இதோடு மட்டுமல்லாமல் நீங்கள் இழந்ததை கார்த்த வீர்யார்ஜுனன் தன்னுடைய கரங்களாலேயே மீட்டெடுத்து, உங்கள் கரங்களில் தரக் கூடிய சக்தியும் இந்த கடவுளுக்கு உண்டு என்று சொல்கிறது சாஸ்திரம்.