எந்த ராசிக்காரர்கள் எந்த சுலோகம் சொன்னால் சிறப்பான வாழ்வு பெறலாம்

273

மேஷ ராசி:
எதையும் எளிதாக சமாளிக்கும் திறன் கொண்ட மேஷ ராசிகாரர்களே நீங்கள் கிருத்திகை தினத்தன்று கீழே உள்ள ஸ்லோகத்தை 27 முறை ஜபித்து, முருகன் கோயிலிற்கு சென்று, முருகப்பெருக்கானுக்கு அர்ச்சனைசெய்தால் வாழ்வில் வளங்கள் பெருகும்.

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்

ரிஷப ராசி:

சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை பூஜை செய்து, கீழே உள்ள ஸ்லோகத்தை தினமும் 11 முறை கூறிவர வாழ்வில் சகல பாக்கியங்களையும் பெறுவீர்கள்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

மிதுன ராசி:

எதிலும் புதுமையை புகுத்தும் திறன் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலிற்கு அர்ச்சனை செய்து, கீழே உள்ள ஸ்லோகத்தை தினமும் 54 முறை கூறி வர சகல மங்களங்களும் பெருகும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

கடக ராசி:

தொலைநோக்கு பார்வை கொண்ட கடக ராசிக்காரர்களே, நீங்கள் பொருண்மை நாட்களில் அம்மன் கோயிலிற்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவதோடு, தினமும் கீழே உள்ள மந்திரத்தை 21 முறை கூறி வந்தால் சிறப்பான வாழ்வு கிடைக்கும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

சிம்ம ராசி:

பிறர் உங்களை போற்றுவதையும், தூற்றுவதையும் சமமாக பார்க்கும் சிம்ம ராசிக்காரர்களே, ஞாயிற்றுக்கிழமை தோறும் நீங்கள் சூரிய பகவானை வழிபடுவதோடு, தினம் தோறும் கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் மூலம் உங்களுக்கு அற்புதமான வாழ்வு கிடைக்கும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

கன்னி ராசி:

பல கனவுகளோடு வாழும் கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலிற்கு அர்ச்சனை செய்து, கீழே உள்ள மந்திரத்தை தினமும் 11 முறை கூறி வர நல்லது நடக்கும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

துலாம் ராசி:

எதிலும் நேர்மையோடு இருக்கும் துலாம் ராசிக்காரர்களே, நெனெகல் ஒன்பது பௌர்ணமி விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து கீழே உள்ள மந்திரத்தை தினமும் 9 முறை கூறி வர பல சிறப்புகள் உண்டாகும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

விருச்சிக ராசி:

விவேகமான சிந்தனை கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் 9 வாரம் செவ்வாய் கிழமை விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டு, கீழே உள்ள மந்திரத்தை தினமும் கூறிவர நல்லது நடக்கும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.

தனுசு ராசி:

எதிலும் தைரியமாக செயலாற்றும் தனுசு ராசிக்காரர்களே, நெனெகல் வியாழக்கிழமை தூறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கீழே உள்ள மந்திரத்தை கூறிவர நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம

மகர ராசி:

உழைப்பையே மூலமாக நம்பும் மகரரசி காரர்களே நீங்கள் சனிக்கிழமையில் விரதம் இருந்து, தினமும் காகத்திற்கு சாதம் வைத்து, கீழே உள்ள மந்திரத்தை கூறி வர சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம

கும்ப ராசி:

கால நேரம் பாராமல் கடுமையாக உழைக்கும் கும்ப ராசிக்காரர்களே, நெனெகல் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வர அனைத்து இன்னல்களும் நீங்கும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம

மீனம் ராசி:

உங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காத மீன ராசிக்காரர்களே, நீங்கள் வியாழக்கிழமையில் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து, கீழே உள்ள மந்திரத்தை கூறி வர துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம