சூரிய கிரகணம்- கிரகண பாதிப்பிலிருந்து விடுபட

0 446

கிரகண பாதிப்பிலிருந்து விடுபட

சூரிய கிரஹணம்:

 கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்.

chandra grah2

 சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும். சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும் நிலையில் முழு சூரிய கிரகணம் இன்று (21/08/2017) திங்கள் கிழமை ஸோமவார அமாவாசை தினத்தில் இரவு இந்திய நேரப்படி இரவு 9.17 முதல் இரவு 2.34 வரை தோன்றுகிறது. இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும்.

ஜோதிடத்தில் கிரகணங்கள்:

 வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரஹணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரஹணம் என கூறுகிறது.

 ஆனால் ஜோதிடத்தில் நிழல் கிரஹங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரஹணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் – சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் – சந்திரன் – ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும்.

 எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இனைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர்.

 அதை தொடர்ந்து இன்று ஏற்படும் சூரிய கிரஹணத்தில் திருகணித பஞ்சாங்க படி சூரியனும் சந்திரனும் சிம்மராசியில் நின்று ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் நிற்கும் வேளையில் திங்கட்கிழமையுடன் கூடிய. ஸோமவார அமாவாசை தினத்தில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்கிறது.

ஈசன் செயலில் ஓர் நன்மையான காரணம் இருக்கும் கிரஹணம் ஜோதிட ரீதியாக ஏற்படும் மாற்றங்கள்

 இன்றைய சூரிய கிரஹனத்தின்போது கால புருஷனின் அயன சயன போக ஸ்தானம் எனப்படும் மீன லக்னத்தில் நீர் ராசி மற்றும் மோக்ஷ திரிகோணத்தில் அமைந்து மற்றொரு மோக்ஷ திரிகோணமான கடகத்தில் ராகு சுக்கிரனோடு இனைவு பெற்று நின்று மற்றொறு மோக்ஷ திரிகோணமாகிய விருச்சிகத்தில் சனி வக்ரம் பெற்று நிற்கும் வேளையில் சூரிய கிரஹணம் நிகழ்கிறது. பொதுவாக பதினைந்து நாட்களில் இரண்டு கிரஹணங்கள் ஏற்படுவது ராஜாங்க விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

 தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்நிலையில் சூரிய கிரஹனம் சூரியனின் ஆட்சி நிலையில் ஏற்படுகிறது. அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றை குறிக்கும் சூரியன் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து தனது ராசிக்கு பன்னிரெண்டில் கடகத்தில் மறைந்து பலமிழந்து நின்றிருந்தது. மேலும் ஆண்மை, வீரம், பலம், அதிகாரம், ராணுவம் ஆகியவற்றை குறிக்கும் செவ்வாய் நீசவீட்டில் பலமிழந்து நின்றிருந்நது. இந்நிலையில் சூரியன் மட்டும் சிம்மத்திற்கு சென்று கிரஹண கால லக்னத்திற்கு ஆறாம் வீட்டதிபதியாகி (சத்ரு ஸ்தானம்) நிற்கிறது.

  நீர் ராசிகளில் ராகு சுக்கிரன் வக்கிர சனி ஆகியவை நின்று கிரஹணம் ஏற்படுதால் கடல் சீற்றம், தொடர்மழை, வெள்ள சேதங்கள் ஆகியவையும் இந்த ஆண்டு இறுதி வரை ஏற்பட்ட வண்ணம் இருக்கும். மேலும் விஷங்களால் பாதிப்பு ஏற்படும். பங்கு சந்தையும் திடீர் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. மோக்ஷ திரிகோணங்களில் கர்ம விணைகளை குறிக்கும் ஸர்ப கிரகங்கள், அசுர குருவான சுக்கிரன் மற்றும் சனைஸ்வரர் வக்ரம் பெற்று நிற்பதால் ஆன்மீக பெரியோர்களுக்கு மோக்ஷ நிலை ஏற்படும்.

கிரகண பாதிப்பில் இருந்து விடுபட

 கிரகணத்தால் நமக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க சாஸ்திரங்கள் ஆலோசனைகளை வழங்குகின்றன. அதன்படி, புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து தானங்கள் வழங்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். மேலும் வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ சிந்தனையுடன் கிரகணம் முடியும் வரை, ஜபங்கள், பாராயணங்கள் செய்யலாம்.

 கிரகணத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து விடுபட, நாம் அணிந்த உடைகளை, நீரில் நனைத்து, துவைத்து காயப் போடுவது, வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம். பாதிப்படைந்த கதிர்வீச்சின் தன்மை கோயிலில் உள்ள தெய்வ சிலைகளின் அஷ்ட பந்தனத்துக்கும் (பீடத்தில் உள்ள மருந்துக் கலவை) தெய்வச் சிலைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கோயில்களை மூடிவிடுவார்கள்.

 மகம் நட்சத்திரத்தில் ஏற்படுவதால், மகம், அசுவினி, மூலம், ரேவதி, பூரம் நட்சத்திரங்களில் உள்ளவர்கள் சாந்திப் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

Image result for mobile icon png9941510000     Related image8124516666     Image result for facebook like png    Image result for youtube subscribe png

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.