ஸ்ரீ போகரின் நவ பாஷாணம்… அறிவியலும் அறியா நுட்பம்…

0 359
   பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள். வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.
   போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது. இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.
     அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.
  இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை. அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது. அத்தனை பேரும் எந்த அளவுக்குச் சித்தி பெற்று பிராணாயாமத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்!.
[huge_it_gallery id=”7″]
    பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத் திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள். மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை, ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும் இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும், அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது. முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர். ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை, பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை! அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான்!

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.