ஸ்ரீ‬ லிங்காஷ்டகம் வரலாற்றின் மகிமை

0 231

 ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.

1. ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

 பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

2. தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
காமதஹம்கருணாகர லிங்கம்I
ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

 தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

3. ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

 எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

4. கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

 தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

5. குங்குமசந்தனலேபித லிங்கம்
பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

 குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

6. தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
தினகரகோடிப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

 தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

7. அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

 எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII

மகாலிங்கத்தைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தப் புண்ணியமான ஸ்தோத்திரத்தை ஸ்ரீபரமேஸ்வரரின் திருமுன், எவர் படிப்பாரோ… அவர், சிவலோகம் சென்று சாட்சாத் சிவபெருமானுடன் ஆனந்தத்தை அனுபவிப்பான்.

சிவாய நம!

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.