வேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம்!

0 615

வேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம்

ச்யாம வர்ணாம் த்ரிநேத்ராம் சவராபயகராம் புஜாம்

ஸ பத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம்

ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் சுஸ்மிதாம் சுமனோகராம்

காமகோடீம் அஹம் வந்தே காமிதார்த்தப்ரதாயினீம்

திருவிளையாடற்புராணத்தில் கௌரி என்ற சிவபக்தைக்கு சிவபெருமான் அருளிய வரலாறு கூறப்படுகிறது. கௌரி என்ற பெண் சிவனடி யார் குடும்பத்தில் பிறந்தவள். ஆனால் அவள் ஒரு வைணவ பிரம்மாச்சாரியை மணக்க நேரி டுகிறது. எனவே புகுந்த வீட்டாரால் இவளது சிவவழிபாட்டிற்குத் தடை உண்டாகிறது. சிவனடியார்க்கு அமுது செய்வித்தலில் கௌரி மிகவும் விருப்பம் மிக்கவள். மகேசனுக்கு இது மிகவும் இன்பம் பயக்குமாதலின் இது ‘மஹேச்வர பூஜை’ எனப்படும் இதனையும் கௌரி சரிவர செய்ய முடியாமல் தவித்தாள்.

கௌரியின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவள் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் வயதான சிவனடியாராக வந்து உணவு வேண்டினார். கௌரியும் தலைவாழை இலை விரித்து உணவு பரிமாறி அடிகளாரை உணவு அருந்த அழைத்தாள். சிவனடியார் இவ்விதம் உணவருந்திக் கொண்டிருக்கையில் கௌரியின் கணவன், அவனது தாய் தந்தையர் வருவது தூரத்தில் தெரிந்தது. உடனே கிழவரான சிவனடியார் கட்டிளம் குமரனாக மாறினார். கௌரி மேலும் பயந்தாள்.

உற்றார் அனைவரும் வீட்டினுள் நுழைந்தவுடன் கட்டிளம் குமரனாயிருந்த சிவனடியார் மிகவும் சிறிய குழந்தையாக மாறினார். உணவு உண்ட இலை, மற்றைய உணவுகள், பாத்திரங்கள் யாவுமே மாயமாய் மறைந்தன. கௌரியின் புகுந்த வீட்டினர் குழந்தையைக் கண்டு ஐயுற்று கௌரியை ஏசினர். உண்மையை உணர்த்த வேண்டி சிவபெருமானும், உமையம்மையுடன் ரிஷபாரூடராய் காட்சி அளித்து, கௌரியையும் ஒளி வடிவாய் ஏற்று முக்தி வழங்கினார். இது திருவிளையாடற்புராணம் கூறும் கதை.

கௌரி என்றாலே தங்கநிறமுள்ளவள் என்று பொருள். பக்தர்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும், பொன்னையும் அளிப்பவளாதலின் ஸ்வர்ணகௌரி என்றும், ஸம்பத்கௌரி என்றும் அழைக்கப்படுகிறாள். ஆடி மாதம் சுக்லபட்ச திருதியை ஸம்பத்கௌரி அல்லது ஸ்வர்ணகௌரி விரதநாள் ஆகும்.

இதேபோல ஆவணி சுக்லபட்ச சஷ்டீ தினம் மங்கள கௌரி விரததினமாகவும், புரட்டாசி கிருஷ்ணபட்ச ஸப்தமியும், சுக்ல பட்ச பஞ்சமியும் கஜகௌரி விரத தினமாகவும், புரட்டாசி அமாவாசை விருத்தி கௌரிக்கு உரியதாகவும், புரட்டாசி சுக்லபட்ச தசமி என்றும் விஜயதசமி தசரத லலிதா கௌரி விரதமாகவும், புரட்டாசி சுக்லபட்ச ஏகாதசியன்று துளசி கௌரி விரதமாகவும், ஐப்பசி அமாவாசையன்று கேதார ஈச்வரரை மகிழ்விக்கும் கேதார கௌரி விரதமாகவும், கார்த்திகை சுக்லபட்ச சதுர்த்தி பதரீகௌரி விரதமாகவும், பங்குனி சுக்ல பட்ச திருதியை ஸௌபாக்ய கௌரியை வழிபடுவதாகவும், சித்திரை சுக்லபட்ச சதுர்த்தி வரதாகவுரி விரதமாகவும், சித்திரை வளர்பிறை பஞ்சமி லாவண்ய கௌரிக்குரியதாயும், வைகாசிசுக்ல பட்ச பிரதமை புன்னாக கௌரி விரமாகவும், ஆனி சுக்லபட்ச திருதியை ரம்பா கௌரியை அனுஷ்டிக்கும் தினமாகவும் ஆவணி சுக்லபட்ச பஞ்சமி சமீப கௌரி விரதமாகவும் கொண் டாடப்படுதல் வேண்டும்.

ஸம்பத் கௌரி செல்வத்தை அளிப்பாள். மங்கள கௌரி திருமணத்தையும் மாங்கல்யமும் அருள்வாள். கஜகவுரி வலிமையையும், விருத்தி கவுரி மக்கட்பேற்றையும், துளசி கௌரி விஷ்ணுவின் அருளையும், கேதார கௌரி ப்ரமேச்வரனின் அருளையும், லாவண்யகௌரி அழகையும், ஸௌபாக்ய கௌரி எல்லா நன்மையும், புன்னாக கௌரி ஸர்ப்ப தோஷங் களை நீக்குதலையும், சமீப கௌரியம்மை தன் ஸாமீப்யமான மோட்சத்தையும் அருளுவார்கள்.

வரதம் என்னும் அம்பாள் காட்டும் முத்திரை எல்லா அபீஷ்டமும் (வேண்டுவன எல்லாம்) தரும் அபயமுத்திரை தன்னை அண்டியவர்கட்கு சரணாகதி அளித்து பயம் ஆபத்து இவற்றிலிருந்து காப்பாற்ற நான் இருக்கிறேன். நீ அஞ்ச வேண்டாம் என்று அம்பாள் அருளுவது ஆகும்.

வரதா கௌரி பக்தர்கட்கு கேட்ட வரங்களை அளித்து அபயம் அளிப்பாள். ரம்பையினால் துதிக்கப் பெற்றவள் ரம்பாகவுரி. ‘ரம்பாதி வந்திதா’ என்று லலிதா சகஸ்ரம் கூறும், ரம்பா ஸேவித பாதுகா என்று பிரத்யங்கிரா ஸஹஸ்ர மும் இதை வலியுறுத்தும்.

ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூலமந்திரத்திற்கு உரிய ரிஷி ஆனந்த பைரவர். அனுஷ்டுப் சந்தஸ், ஸம்பத் கௌரி தேவதை, ஹ்ராம்-பீஜம், ஹ்ரீம்-சக்தி, ஹ்ரூம்-கீலகம் (ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ர-அங்கன்யாச கரநியாசங்கள்) மூல மந்திரம் பின் வருமாறு.

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி

ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,

தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்

ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்

தேஹி குருகுரு ஸ்வாஹா

மேற்படி மூலமந்திரத்தை வில்வதளங்களால் முக்கோண வடிவ ஹோமகுண்டத்தில் ஹோமம் செய்யின் எல்லையற்ற செல்வமும், மஞ்சள் தூயப்பட்டால் செய்தால் தங்கம், நகைகள் சேர்க்கையும், ரோஜா மலரால் ஹோமம் செய்தால் கல்வியில் தேர்ச்சியும், சிவந்த புஷ்பங்களால் செய்தால் மக்கள் கவர்ச்சியும், வேம்பு எண்ணையால் செய்யின் சத்ருநாசமும், தேனில் எள் கலந்து ஹோமம் செய்தால் பித்ருதோஷம் நீங்குதலும், சந்தனக்கட்டையால் செய்ய வியாபார அபிவிருத்தியும் ஏற்படும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.