செல்வம் தரும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

0 1,105

செல்வம் தரும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

 பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு . இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும் . பார்த்த நித்யபூஜா விதி என்ன கூறுகிறது என்றால் காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

 சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார் .உங்கள் தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன் மூலம் ஏற்ப்படும் கஷ்டம், பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர அல்லது உயர் பதவியில் அமர இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு கண்டிப்பாய் உதவிடும். பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் நடக்கும் போது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் உண்டாகும்தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அல்லது அன்றைய தினம்  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும் .

நவக்கிரக பைரவரின் வடிவங்கள் உணர்த்தும் பலன்கள்

வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார்.ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம்.அதற்காக ஒரே ஒரு முறை மட்டும் வழிபட்டால் போதும் என்ற மனநிலை வேண்டாம் . சிரத்தையான உண்மையான வழிபாடு மூலம் பலனை உடனே அடையலாம்வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.

மேலும் ஜீவகனி எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுவது விஷேசம்…கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இதை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திருநாட்களில் செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் உள்ளது

தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.சனி மாற்றத்தால் அசுப பலன் ஏற்ப்படகூடிய ராசிகாரர்களும் சனி திசை / புக்தி நடப்பவர்களும் தினமும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு மேற்கொள்ளுவதும் சிறப்பு.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.