திக்கற்றோருக்குத் துணையிருப்பார் தெய்யார் திருவேங்கடவன்

0 123

 தமிழகத்தில் அவதரித்த பல அருளாளர்களும் அரும்பாடுபட்டு பல திருக்கோயில்களை அடியோடு தகர்க்கப்படுதவிதிலிருந்து காப்பாற்றியதற்கு தமிழகத்தின் சரித்திரம் சான்று கூறுகிறது. இத்தகையை மிகப் பழமையான, புகழ் வாய்ந்த திருக்கோயில்களில் ஓன்றுதான் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் தெய்யார் எனும் கிராமத்தில் திகழும் ஸ்ரீ அலர்மேல்மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமான் திருக்கோயிலாகும். மகத்தான புண்ணிய திருத்தலமான தெய்யார் எனும் திருத்தலத்தின் உண்மையான, புராதன திருப்பெயர் ஸ்ரீ பராங்குசபுரம் என்பதாகும். ஆச்சார அனுஷ்டானங்களிலும், எம்பெருமானிடத்தில் வற்றாத பக்தியுடனும், நான்கு வேதங்கள், நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றில் தன்னிகரற்ற புலமை வாய்ந்த பெரியோர்களும் முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகளும், பல அருளாளர்களும் ஜோதிஷ சாஸ்திரத்தில் வல்லுனர்களும் வாழ்ந்து, சிறப்பித்த ஊர் இந்த பராங்குசபுரம்.

உலகப் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வைணவ மடம், ஸ்ரீமத் அஹோபில மடம், ஸ்ரீ லட்சுமி நரசிம்மனாலேயே ஸ்தாபிக்கப்பட்ட மடம், ஸ்ரீ அஹோபில மடம், கிருத யுகத்தில் இரண்யன் என்ற அசுர மன்னனின் தலைநகரமாக விளங்கியது அஹோபிலம், இரண்யனின் குழந்தையான பிரகலாதன், தாயின் கருவில் இருந்த காலத்திலிருந்தே, மகரிஷி நாரதரிடம் நாராயண மந்திர உபதேசம் பெற்றதால், பிறந்ததிலிருந்தே பகவானிடம் அளவற்ற பக்தி கொண்டவனாக விளங்கினான். பிரகலாதனின் பக்தி, தந்தையான இரண்யனுக்கு பிடிக்கவில்லை. அதனால் தன் பிள்ளையை பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். பகவான் நரசிம்மராக அவதாரம் எடுத்து இரண்யனை வதைத்து தர்மத்தை நிலைநாட்டி குழந்தை பிரகலாதனையும் காப்பாற்றி அருள்புரிந்தான்.

image 1 மூன்று யுகங்களையும் கடந்து, நான்காவது யுகமாகிய இந்த கலியுகத்தில் இரண்யனின் தலைநகர், காலம் மற்றும் இயற்கை ஆகியவற்றின் காரணமாக இன்று அடர்ந்த காட்டுப்பகுதியாக மாறியுள்ளது. இருப்பினும் குழந்தை பிரகலாதனுக்காக, நவநரசிம்மர்களாக (ஓன்பது நரசிம்மர்கள்) தோன்றிய பகவான் சீற்றம் குறைந்து அஹோபிலத்திலுள்ள ஓன்பது இடங்களில் நவநரசிம்மர்களாக எழுந்தருளியுள்ளான். அவ்விதம் பகவான் எழுந்தருளியுள்ள அஹோபிலத்தின் இழ்ந்த குகை ஓன்றில் ஸ்ரீஜ்வாலா நரசிம்மராக (இரண்யன் மீது கோபத்தினால் தீப்பிழம்பாக) சேவை சாதிக்கிறான். பயங்கரமான, இழ்ந்த இருண்ட இக்குகையினுள் செல்வது இயலாத காரியமாகும்.

 இத்தகைய பயங்கரமான குகையினுள், பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்ரீமத் அஹோபில மடத்தின் ஆறாவது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ சஷ்டபராங்குச யதீந்த்ர மகாதேசிகன், ஸ்ரீ நரசிம்மன் மீது வைத்த ஆழ்ந்த பக்தியினால் இருண்ட அந்த குகையினுள் பிரவேசித்து அங்கேயே இருந்து விட்டார். இன்றும் அஹ்ர் அந்த குகையினுள் ஸ்ரீஜ்வாலா நரசிம்மரை ஆராதிக்கும் மணிசப்தம் பலருக்கும் கேட்கிறது.இத்தகைய தெய்வீகப் பெருமையும், அளவற்ற சக்தியும் கொண்ட அருளாளர்தான் பதினைந்தாம் நூற்றாண்டில், தற்போது நாம் சேவித்து இன்புறும் பெருமானான ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமானை எழுந்தருளச் செய்து மகோன்னதமான முறையில் பிரதிஷ்டை செய்து அருளினார். இந்த வைபவம் திருக்கோயிலின் பிரதான கலசத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

பழம்பெருமை வாய்ந்த சோழர் காலத்தில், புகழ் வாய்ந்த பராந்தக சோழ மன்னனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அப்போது இத்திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலித்த பெருமானின் திருநாமம் ஸ்ரீ வரதராஜப் பெருமான்.பிற்காலத்தில் சமண மதம் பரவி,இப்பகுதியை சமண மதத்தைப் பின்பற்றிய மன்னர்கள் ஆண்டபோது இத்திருக்கோயில் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்ததாகத் தலவரலாறு கூறுகிறது. இந்நிலையில் புறக்கணிக்கப்பட்டிருந்த திருக்கோயிலைத்தான் ஸ்ரீமத் அஹோபில மடத்தின் ஆறாவது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீமத் அழகியசிங்கர், ஸ்ரீ அலர்மேல்மங்கா நாயிகா சமேத ஸ்ரீஸ்ரீநிவாஸப் பெருமானை பிரதிஷ்டை செய்து, மகா சம்ப்ரோக்ஷண வைபவத்தை உலகோர் வியக்கும்படி செய்தருளினார்.

image 3 இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமானின் பேரழகும், அந்த அழகிற்கு இணையாக ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயாரின் லாவண்யமும் அளவிட முடியாதவை. தரிசித்த அந்த விநாடியே நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது இத்திவ்ய தரிசனம். தாயார் மற்றும் பெருமானின் திவ்ய சக்தி ஆளவற்றது. திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடத்து இன்னமுதனான அந்த ஸ்ரீநிவாஸனே, அதே திருநாமத்தில் இங்கும் எழுந்தருளியிருப்பதை உணரமுடிகிறது. பல தருணங்களில் பக்தர்கள் மீது ஆவேச எழுந்தருளி, அவர்களது துன்பங்களைத் தீர்த்து இன்னருள்புரிவதால், இப்பெருமானை ஆவேச ஸ்ரீநிவாஸப் பெருமான் என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

  திருமலையில் நடப்பது போன்று இத்திருக்கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மிகவும் புகழ்பெற்றது. தங்கள் குழந்தைகளுக்கு திருமண பாக்கியம் கிடைப்பதில் தடங்கல் (அ) தாமதம் ஏற்பட்டால், இப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து வைப்பதாக வேண்டிக்கொள்வது உடனடியாகப் பலன் அளிக்கிறது. இதனை அனுபவத்தில் காண முடிகிறது. திருமலையைப் போன்றே அங்கப்பிரதட்சணம் செய்வது, முடிகாணிக்கை செலுத்துவது போன்ற நேர்த்திக் கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.

 இத்திருச்சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் கருடனின் அழகைக் காண கோடிக்கண்கள் போதாது. உடலெங்கும் சர்ப்பங்கள், ஆபரணங்களாக விளங்குகின்றன. ஆதிசேஷனும், குளிகனும், கருடனின் இடது மற்றும் வலது திருக்கரங்களில் கங்கணமாக பிரகாசக்கின்றனர். இந்திரலோகத்தின் நாக சர்ப்பங்களான வாசுகி கருடனின் பூணூலாகவும், தட்சகன் அரைஞான் ஆகவும், கார்க்கோடகன் ஆரமாகவும் கருடனின் கம்பீர அழகிற்கு மேலும் அழகூட்டுகின்றனர்.

    பிரசித்திப்பெற்ற நாச்சியார் கோயிலில் சேவை சாதிக்கும் கல்கருடனைப் போன்றே, இந்த சர்ப்பங்களை ஆபரணங்களாக அணிந்து சேவை சாதிக்கும் இந்த கருடாழ்வார் ராகு மற்றும் கேதுவினால் ஏற்படும் கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து வருவது மக்களிடையே பிரசித்தமாக உள்ளது.

காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா

 பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தை அலங்கரித்தவரும், மகாபெரியவா என்று உலகமே போற்றி பூஜிக்கப்பட்டு வருபவருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனது யாத்திரையின்போது இவ்வூரில் மிகுந்த இசையுடன் இரண்டு நாட்களுக்கு தங்கி பெருமானையும்,தாயாரையும் தரிசித்து மகிழ்ந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்ரீமத் அஹோபில மடத்தின் 45வது பட்டம், ஸ்ரீலட்சுமிநரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகாதேசிகள் இப்பெருமானின் பேரழகில் உள்ளம் நெகிழ்ந்து, அடிக்கடி அவ்வழகினைப் பற்றி பேசி திருவுள்ளம் மகிழ்வது வழக்கம்.

திருப்பணிகள்:-
மிகப்புராதனமான இத்திருக்கோயிலில் பல திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இத்திருப்பணிகளுக்கு உதவ விரும்பும் அன்பர்கள் தங்கள் அவரவர் வசதிக்கேற்ப உதவினால் பரம புண்ணியம் அடையலாம்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png9941510000     Related image8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.