திப்பிலி மருத்துவ குணங்கள்

0 1,563

திப்பிலி அறிய மருத்துவ குணங்கள் கொண்டது. இருமல், களைப்பு, வயிற்று வலி, வாய்வு போன்ற பல பிரச்சனைகளை குணமாக்க வல்லது.

திப்பிலியின் மருத்துவ குணங்களும் அதை உட்கொள்ளும் முறையும் :

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்.

திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.

திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.

திப்பிலியை சிறிதளவி தேனில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவர பசியின்மை, வயிற்று க்கோளாறுகள் குணமாகும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.