திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவம்

0 153

திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம்

அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவப் பத்திரிகை

திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவப் பத்திரிகை

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்
தயிர் வாவியும் நெய்யலாறும் அடங்கப்
பொட்டத்துற்றி மாரிப் பகை புணர்த்த
பொருமா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை
வல்வாய்த் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
கோவர்த்தமென்னும் கொற்றக் குடையே

  –  பெரியாழ்வார்  திருமொழி

சென்னை திருமயிலை குயப்பேட்டை சாலிவாகன வம்சத்தினர் அழுகையிலிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீதா லக்ஷ்மண, பரத சத்ருகன ஹனுமந் சமேத ஸ்ரீ கோதண்டராம சுவாமி, ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கு நாளது ஹேவிளம்பி வருஷம் ஆனி மாதம் 11 ம் நாள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை புனர்வசு நட்ஷத்திரம்  கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணி அளவில் விசேஷ திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து  அன்னக்கூட திருப்பாவாடை உற்சவமும் நடைபெறும். சாலிவாகன வம்சத்தினர்களும் பக்தர்களும் வருகை தந்து எம்பெருமானை சேவித்து தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்டு, ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி அனுக்ரகத்திற்கு பத்திரர்களாகும்படி கோருகிறோம்.

மேலும் தொடர்புக்கு:

திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம்
கோதண்டம்
B . பாலாஜி
044 -24980132/24660380
செல்: 7010528851

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.