முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

0 36

திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar)

திருவெம்பாவை (Thiruvempavai)  பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை (Thiruvempavai)  பாடல் விளக்கம் :

    சென்ற பாடல் வரையிலும் எழுந்து வரச் சோம்பல்படும் தோழியைரைப் பார்த்துப் பாடியவர்கள் இந்தப் பாடலில் தொடங்கிப் பெருமானின் புகழைப் பாடுகின்றனர். ‘மிகப் பழமையானவற்றுளெல்லாம் பழமையானவனே, பின்னர் மிகப் புதுமையெனக் கருதுபவை அனைத்துக்கும் புதுமையானவனே!

‘செம்மையான அடியாராகிய நாங்கள் உன்னை மட்டுமே தலைவனாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் உனது அடியார்களின் தாள்களைப் பணிவோம். ‘அவர்களுக்கே நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம். அவ்வாறு உனக்கு யார் அடியாரோ அவரே எமக்குக் கணவராக முடியும். அவர்கள் விரும்பியபடியே தொண்டராக இருந்து பணி செய்வோம். இத்தகைய வாழ்க்கையை நீ அருளுவாயென்றால் எமக்குக் குறையெதுவும் இருக்காது.’

      பழமையான பொருட்களுக்கெல்லாம் முன்னேயான பழையவனாகவும், புதுமைகளுக்கு எல்லாம் பிற்பட்ட புதியவனாகவும் விளங்கும் தன்மை உடையவனே ! உன்னையே தலைவனாகக் கொண்டு உன் அடியவர்கள் ஆனோம். உன் அடியார்களின் தாள் பணிவோம். அவர்களுக்குத் தோழர்கள் ஆவோம். உன் அடியார்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வோம். அவர் உகந்து சொல்வதற்கு ஏற்றாற்போல அவருக்கு அடிபணிந்து தொண்டு செய்வோம்.

  நாமறிந்த, அறியாத அனைத்துக்கும் மூலகாரணமானவன் சிவபெருமானே. நமக்குப் பின்னும் அடுத்தடுத்த ஊழிகளிலும் தொடர்ந்து இருக்கப் போகும் அவனை எல்லாவற்றுள்ளும் புதுமையென்று கருதுவதில் தவறென்ன. ‘உன்னையும் உன் அடியாரையும் மட்டுமே பணிவோம்’ என்று உறுதியோடு இருக்கும் இம்மகளிர் சிவநிந்தனை செய்வாருக்கு வாழ்க்கைப்பட்டால் அவர் வாழ்க்கை முழுதுமே துன்பமாகிவிடாதோ. எனவேதான் நாம் விரும்பியவாறு கணவரை நீ எமக்கு அருளிவிட்டால் பின்னர் எமக்குக் குறையெதுவும் இருக்காது என்கின்றனர்.

-திருவெம்பாவை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.