துஷ்டசக்திகளை விரட்டும் நாமக்கல் இலட்சுமி நரசிம்மர்

0 115

 நாமக்கல் மாவட்டம் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குபுறம் உக்ர நரசிம்மர் திருகு;கோலத்தில் காட்சியளிக்கிறார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த  கோவிலை பல்லவ மன்னர்கள் புதுப்பித்தனர் இங்குள்ள நரசிம்மர் இங்கு லட்சுமி நரசிம்மர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்  இவரை துஷ்ட சக்தியால் பாதிக்கப்பட்டவர்களும்  பயம் போக்கி பயம் தீர்ப்பார் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை, பிரார்த்தனைகள் நிறைவேறியதும் வெற்றிலை  மாலை  சாத்தி புது வஸ்திரம் அணிவித்து நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்

பல்லவமன்னரால் சீரமைக்கப்பட்டது:

 குடவறைக் கோயில்களில் பிரசித்தி பெற்றது நாமக்கல் நரசிம்மசாமி கோயில். ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்ட இந்த கோயில், கிபி.7ம் நூற்றாண்டில் ஆதியேந்திர குணசீலன் என்ற பல்லவமன்னரால் சீரமைக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டுக்குறிப்புகள் கூறுகின்றன. இரணியனின் கொடுமைகளில் இருந்து பிரகலாதனை காப்பதற்கு மகாவிஷ்ணு எடுத்தது தான் நரசிம்மஅவதாரம். இரண்யவதத்திற்கு பிறகு உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர். பிரகலாதனின் வேண்டுகோளால் சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்ந்தார். விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலய குளத்தில் நின்று தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலய குளத்தை கண்டதும், தனது தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார்.

 தாகம் தீர்த்த அனுமாரால் சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்த நரசிம்மருக்காக கட்டப்பட்டது தான், இந்த அற்புத குடவறைக் கோயில் என்கின்றது தலவரலாறு. பாறையில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ள நரசிம்மர், சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கும் நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் நுட்பத்துடன் தென்படுகிறது. திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவற்றின் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரின் பாதங்களைப் பார்த்தபடி இருப்பது சிற்பக்கலையின் சிகரமாக உள்ளது. நாமக்கல் மலைக்கோட்டையை மகாவிஷ்ணுவின் கோட்டை என்கின்றனர் பக்தர்கள்.

  மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைக்கோட்டையின் உள்ளே வரதராஜராகவும், மலையின் மேல் நரசிம்மராகவும் காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் இங்கு பூஜிக்கப்படுவதால், இந்த தலத்தை மும்மூர்த்தி தலம் என்று அழைக்கின்றனர். மூர்த்திகளுக்கும் நரசிம்மர் சன்னதியில் மூன்று காலப்பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #lakshmi narasimmar

 Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.