ஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும் பிரதோஷ விரதம்!

0 2,193

ஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும் பிரதோஷ விரதம்!

 சிவபெருமானை வணங்க செல்பவர்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதோஷ வேளையில், கருவறை ஈசனை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தரிசிக்க வேண்டும். அங்கேதான் தேவர்களுக்கு சந்தியா நிருத்தத்தை ஈசன் ஆடிக்காட்டியருளினார். பிரதோஷ வேளையில் நீலகண்டப் பதிகத்தையும் பாராயணம் செய்வது விசேஷம்.

 பிரதோஷ வேளையில் ஈசன் ரிஷபத்தின் மீது ஆலயவலம் வரும்போது, மூன்றாவது சுற்றில் ஈசான (வடகிழக்கு) திக்கில் நடைபெறும் வழிபாட்டை தரிசிப்பது சிறப்பான புண்ணியம் தரும். ஈசான திக்கில், ஈசன் ஆலகால விஷமருந்தி பின் எழுந்து ஆனந்த தாண்டவம் ஆடியபோது கூடவே பூதகணங்களும் பூதநிருத்தம் ஆடின. இதற்கென பிரத்யேகமாக ராகம், தாளம், வாத்தியம் உண்டு.

 பிரதோஷ நேரத்தில் ஈசனுக்கு வில்வ தளங்களால் மாலை தொடுத்து அணிவிப்பது பெரும் பாக்கியம் தரும். பிரதோஷ வேளை, ரஜ்னிமுக வேளை என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு இரவின் முகம் என்பது பொருள். தோஷம் என்றால், குற்றமுள்ள என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. குற்றமற்ற அந்த வேளையில் ஈசனைத் தொழ, நம் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

  ஈசன் விஷத்தையுண்டு, சயனித்து, பிறகு எழுந்து முதன்முதலாக சந்தியா தாண்டவத்தை ஆடியது ஒரு சனிக்கிழமை மாலையில்தான் என்பதால் சனிப்பிரதோஷம் சிறப்பானது. நாம் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதில் ஒரு சிறு தொகையை சனிப்பிரதோஷ வேளையில் தர, நம் கடன்கள் சீக்கிரம் அடைபடும் என்பார்கள்.

 தினமும் மாலைவேளையை தினப்பிரதோஷம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை, திரயோதசி நாட்களில் வரும் பிரதோஷம் பட்சப் பிரதோஷம் என்றும், மகாசிவராத்திரிக்கு முன் வரும் பிரதோஷம் மகாபிரதோஷம் என்றும் அழைக்கப்படுகின்றன. மகாசிவராத்திரிக்கு முன்வரும் பிரதோஷம் சனிக்கிழமையன்று வந்தால் அது சனி மகாபிரதோஷமாகும். அன்று ஈசனை தரிசித்தால் ஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும்.

 தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்பவர்களுக்கு சிவலோக பதவி கிட்டும். பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்திற்கு அம்பிகை பாட, நான்முகன் தாளம்போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாராயணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழுகோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதீகம்.

 பிரதோஷ காலங்களில் ஈசனின் கருவறை கோமுகம் அருட்சக்தியோடு துலங்குவதால் அதை பக்தியுடன் வணங்க வேண்டும். ஆலகால விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் முன்னும் பின்னுமாக ஓடியதை நினைவுறுத்தும் வகையில் பிரதோஷ வேளையில் சோமசூக்தப் பிர தட்சிணம் செய்யப்படுகிறது. அது அனந்தகோடி பலனைத் தரும் என்பர்.

 ஈசன் பாற்கடலிலிருந்து வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டபோது அதன் உஷ்ணம் அவரைத் தாக்காமலிருக்க அசுவினி தேவர்கள் மயில் பீலி ஆலவட்டத்தை வீசினர். அதன் நினைவாக இன்றும் பிரதோஷ வேளையில் பல ஆலயங்களில் ஈசனுக்கு மயில் பீலி விசிறிகளால் வீசுகின்றனர்.

 சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறு கிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:

1. பால் நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் பல வளமும் உண்டாகும்
3. தேன் இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் செல்வம் பெருகும்
6. நெய் முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் நல்ல மக்கட்பேறு கிட்டும்
8. சர்க்கரை எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் சுகவாழ்வு
10. சந்தனம் சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் தெய்வ தரிசனம் கிட்டும்

பிரதோஷ வழிபாடு பலன்

ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் –  நல் எண்ணம், நல் அருள் தரும்.
செவ்வாய் பிரதோஷம் –  பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
புதன் பிரதோஷம் –  நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.
வெள்ளி பிரதோஷம் –  எதிரிகள், எதிர்ப்பு விலகும்.
சனிப் பிரதோஷம் –  அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும்.

1. அறிவும், வீரியமும், அழகும் பெற முருகப்பெருமானை வணங்கலாம்.
2. ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள ஆஞ்சநேயரை வழிபடலாம்.
3. குடும்ப செழிப்பை பெற திருமகளை வணங்கி வரலாம்.
4. யோக சக்தியையும், மந்திர சக்தியையும் பெற அன்னை பராசக்தியை வழிபட்டு வரலாம்.
5. கலையை, கல்விச் செல்வத்தை பெற சரஸ்வதியை வழிபடலாம்.
6. யோகத்தில் சிறந்து விளங்க சிவசக்தியை வணங்கலாம்.
7. வெற்றிமேல் வெற்றி பெற ராஜகணபதியை வழிபடலாம்.
8. குடும்பத்தை வாட்டிடும் இன்னல்கள் தீர மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் முதலிய தெய்வங்களை வழிபடலாம்.
9. வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்பட பெருமாளை வழிபடலாம்.
10. இவ்வுலகத்தில் எல்லாவித இன்பங்களையும் முக்தியையும் அடைய விரும்புபவர்கள் சிவபெருமானை வழிபடலாம்.

ஓம் நமசிவாய

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/ 

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.