மும்மூர்த்திகளின் அருளை பெற வேத மூலாதாரம் காயத்ரி மந்திரம்!

0 281

மும்மூர்த்திகளின் அருளை பெற வேத மூலாதாரம் காயத்ரி மந்திரம்!

அன்னை ஆதிபராசக்திக்குப் பல்வேறு நாமங்கள் உண்டு ! பல்வேறு வடிவங்கள் உண்டு. அவற்றுள் காயத்திரி வடிவம் ஒன்று.  ஒரு முறை பிரம்மன் “புஷ்கரம்” என்னும் புண்ணியத்தலத்தில் ஒரு யாகத்தைத் தொடங்கினார். அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி தேவி வராததால், பிரம்மா தனது சக்தியால் காயத்ரி தேவியை சிருஷ்டித்தார். காயத்திரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள். பிரம்மாவும் தனது யாகத்தை முடித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

 காயத்திரி தேவி செம்பருத்திப் பூப் போன்ற சிவந்த நிறம் கொண்டவள்.செந்தாமரையில் எழுந்தருளியிருப்பாள். இவளுக்கு ஐந்து முகங்கள் ;பத்துக் கரங்கள் உண்டு. அபய கரம், வரதகரம், அங்கு சம், சாட்டை (உட்புறமும் வெளிப்புறமும் தீய சக்திகளை நீக்குவது) .க பாலம் (சிவ தத்துவம்), கதை (விஷ்ணு தத்துவம்), சங்கு, சக்கரம், இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவன். நான்கு வேதங்களையும், நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள் எனச் சாத்திரங்கள் போற்றுகின்றன.

வேதத்தின் மூலாதாரமாகக் காயத்ரி மந்திரம் திகழ்வது.

காயத்திரி என்ற சொல் காய்+ த்ரீ எனப் பிரிந்து பொருள்தரும். அதாவது காய் என்றால் கானத்திற்கு உரியது . பாடப் பெறுவது எனப் பொருள் கொள்ளலாம் காயத்திரி மந்திரத்தைத் தாளம் தப்பாமல் சொல்லித் தியானித்தால், பெரும் பலன் உண்டு.

திரி – என்பது த்ராய தே என்று விரிந்து, காப்பாற்று எனப் பொருள்படும். அன்னை காயத்திரி தனது அபய கரங்களால், நமது பயத்தைப் போக்குகிறாள்.

கா+ ய+ ஆ+ த்ரீ எனும் நான்கு எழுத்துகளின் சேர்க்கை தான் காயத்ரி.

கா__ என்பது நீர்த் தத்துவமாகிய கண்களுக்கும் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன்

ய- – என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது’.இதற்கு அதிதேவதை விஷ்ணு.

ஆ__ என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்திரன்.

த்ரீ — என்பது இந்த மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றி அருள்வது என்பதைக் குறிக்கும்.

எனவே ஒருமுகப் பட்ட மனத்தோடு காயத்திரி மந்திரம் சொல்லி வழிபட்டால், மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம்.

ஓம் பூர் – புவ_ஸீ வஹ்-!

தத் _சவித்தூர் – வரேண்யம் -!

பார்கோ தேவஸ்ய தீமஹி -!

தியோ யோந ப்ரசோதயாத் -!

– என்பது காயத்ரி மந்திரம் .

“எவர் நமது அறிவைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக!” என்பதே இந்த மந்திரத்தின் பொருள். எல்லாத் தெய்வங்கட்கும் காயத்ரி மந்திரம், பிரார்த்தனை மற்றும் தியானசுலோகமாக உள்ளது. எல்லாக் காயத்ரி மந்திரங்கட்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரி ஆகும்.

 இது தவிர மற்ற தெய்வங்கட் கும், நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்கள் உண்டு. காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் உள்ளன. அவை அனைத்தும் 24 ரிஷிகள், 24 பலன்களைக் குறிக்கும். 24 அட்சரங்களை 3 வேதத்திற்கு உரியவாறு பிரித்துள்ளனர்.

 காயத்ரி மந்திரம் ரிக் வேதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மந்திரங்களில் ஒன்று தான் என்றாலும், 24 எழுத்துக்களைக் கொண்ட காயத்ரி மந்திரம் வேத மந்திரங்களின் சாராம்சமாகக் கருதப்படுகிறது. தன்னை ஜபிப்பவர்கட்குப் பாதுகாப்பளித்து, ஓர் அரணாகத் திகழ்வதால், காயத்ரி மந்திரத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது . சந்தரங் அமைப்பிலுள்ள காயத்ரி மந்திரத்தையே, வேத மாதாவாக நாம் போற்றுகிறோம். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளுமே காயத்ரி மந்திரத்தின் அதிதேவதைகளாகக் கருதப்படுகின்றனர் – காயத்ரி தேவிகாலை சந்தியா வந்தை த்தின் போது அதிதேவதையாகவும், ரிக் வேத ரூபிணியாகவும், மூன்று அக்கினிகளில் காருகபத்திய அக்கினியாகவும் வணங்கப்படுகிறாள்.

 நண்பகலில் எசுர் வேத சொரூபிணியான சாவித்ரியாகவும், மாலை வேளையில் சரஸ்வதி தேவி, சாம வேதத்தில் ஆகவனீய அக்கினியாகப் போற்றப்படுகிறாள். ஐந்து தலைகளோடும், பத்துக் கைகளோம், தாமரை அல்லது அன்னவாகத்தின் மீது ஆரோ கணித்திருக்கும் காயத்ரி தேவி பிரம்மாவின் மனைவி என்பதால், தன்னுடைய ஒரு முகத்தோடு பிரம்மாவின் நான்கு முகங்களையும் கொண்டுள்ளதாக ஐதீகம் .

 காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து தேவதைகளின் ஐந்து முகங்களைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு முகமும் மூன்று கண்களோடு தேவி சித்தரிக்கப்படுகிறாள்.

 படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, காக்கும் கடவுளான விஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, அழிக்கும் கடவுளான சிவனின் தேவியான பார்வதி ஆகிய மூவரும் ஓர் உருவமாகக் காயத்ரி தேவியாக விளங்கி நமக்கு ஞானத்தையும், வைராக்கியத்தையும் அருளகிறார்கள். ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய ஐந்து நிறங்களில் காயத்ரி தேவியின் ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன.

 காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும், சரஸ்வதியும் அமர்ந்திருப்பது போலக் காட்டப்படுவது உண்டு – தானத்தில் சிறந்தது அன்னதானம் !திதிகளில் சிறந்தது துவாதசி திதி! மாதங்களில் சிறந்தது மார்கழி! அது போல மந்திங்களில் சிறந்தது காயத்ரி எ ன்பார்கள்.

கிருஷ்ண பகவானும் தனது கீதையில் “மந்திரங்களில் நான் காயத்ரி யாக இருக்கிறேன்” என்கிறான். உலக நன்மைக்காக விசுவாமித்திரர் கண்டுபிடித்துக் கொடுத்த மந்திரமே காயத்ரி மந்திரம் – பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு, காயத்ரி மந்திரமே ஆதாரம்.காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரி’ !

“காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை –

தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை’

காசியை விடப் புண்ணிய தீர்த்தம் இல்லை’

ஏகாதசியை விஞ்சிய விரதம் இல்லை,

– என்கிறது ஒரு சுலோகம்!

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.