இன்று இந்த ஆண்டின் நான்காவது நடராஜர் மஹாஅபிஷேகம்!

0 438

இன்று இந்த ஆண்டின் நான்காவது நடராஜர் மஹாஅபிஷேகம்!

 நடராஜர்க்கு வருடத்தில் ஆறு முறை மஹா அபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டின் நான்காவது மகாஅபிஷேகம் புரட்டாசி சதுர்த்தசியான இன்று நடைபெறுகிறது.

 பழங்காலத்தில் புகழ்பெற்ற கோயில்களில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில ஆலயங்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சிதம்பரம் நடராஜர் ஆலயம் உள்பட சில ஆலயங்களில் ஆண்டிற்கு ஆறு முறை மட்டுமே இறைவனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

nataraj

 மனிதர்களின் வாழ்வில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என ஆறு பொழுதுகள் இருக்கின்றது.

 இதில் தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில்தான் ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறும்.

 அதே போல் மாசி மாதமானது தேவர்களுக்கு காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை அபிஷேகம் நடைபெறும்.

 உச்சி கால பொழுதானது தேவர்களுக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் உச்சிகால அபிஷேகமாக நடத்தப்படும்.

natrajar 2

 ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை நேர அபிஷேகம் செய்யப்படுகிறது. இதுவே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது.

அதே போல் ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். புரட்டாசி மாதம் அர்த்தஜாம வேளையாகும். எனவே ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகமும், புரட்டாசி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.

 சித்சபை முன் உள்ள கனகசபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு இன்று மாலை 6.00 மணியளவில் பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட உள்ளது.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.