உதி நோய் தீர்க்கும் மருந்தாகவும், துயர்போக்கவும்…

0 1,454

உதி நோய் தீர்க்கும் மருந்தாகவும், துயர்போக்கவும்…

‘சாய்பாபா..’ இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தமாம்.  இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

துனியின் எதிரே பாபா தினம் அரை மணி நேரம் அமர்வார். பக்தர்கள் வீடு திரும்பு கையில் துனியிலிருந்து பாபா விபூதி அளிப்பார். இந்த விபூதிக்கு உதி என்று பெயர். இது மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் பலருக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும், துயர்போக்குவதாகுவும் விளங்கியுள்ளது.

 சீரடி சாய்பாபா சீரடியில் அற்புதமான செயல்களைச் செய்து அனைவரையும் நேசிக்கவும் வைத்தார். அனைவரது துயரங்களுக்கும் விடியலாக பல அற்புதங்களைச் செய்து மகிழ்ச்சியடையச் செய்தார். அவர் வேப்பமரத்தடியில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வந்தாலும் இசுலாமிய வழிபாட்டுத் தலமான மசூதியில் தங்கிக் கொண்டு அவர்களுடைய நம்பிக்கைக்கும் உரியவரானார். எனவே இரு மதத்தினருக்கும் மத அடிப்படையிலான ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி மத வேற்றுமைகளை நீக்கினார்.
 ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும்.

விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும். மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும். சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.

 

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.

ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.

ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”.

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:

ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.