யாருக்கு பெண்கள் தொடர்பு இருக்கும்? யாருக்கெல்லாம் காதல் வாழ்க்கை அமையும்?

303

யாருக்கு பெண்கள் தொடர்பு இருக்கும்? யாருக்கெல்லாம் காதல் வாழ்க்கை அமையும்?

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே இளைஞர்கள், காதலர்கள் செம குஷியாகிவிடுவார்கள். ஏனென்றால், ஒவ்வொரு லவ் பண்ணுறவங்க, தங்களது காதலை புரபோஸ் செய்வார்கள். இதுவே, காதலிப்பவர்கள் தங்களது காதலை அடுத்த கட்ட த்திற்கு கூட கொண்டு செல்வார்கள். அதான், காதலிப்பவர்கள் திருமணம் செய்வார்கள் அல்லவா, அதைத் தான் சொன்னேன்.

சாதி, மதம், நாடு, மொழி, இனம் இவற்றைக் கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாமிப்போம் என்று கூறி இந்த ஆண்டு யாருக்கெல்லாம் காதல் கைகூடும் என்பது குறித்து பார்ப்போம். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

காதல் மனித குலம் தோன்றியதிலிருந்தே இருந்து வருகிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் முக்கியமான ஒன்று. ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், சனி மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் காதலுக்கு முக்கியமான கிரகங்களாகவே கருதப்படுகிறது. இதில், சுக்கிரன் ஒருபடி மேலாக சென்று பெண்கள் விஷயத்தை சுட்டிக்காட்டும்.

பொதுவாக ஜாதகத்தில் நவகிரகங்கள் சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து திருமண பாக்கியம், தாம்பத்திய உறவு, குழந்தை பாக்கியம் ஆகியவை அமைகிறது. ஜாதகருக்கு காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதைப் பார்க்க ஒருவரது ஜாதகத்தில் லக்னம் 5ஆம் பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம், 7ஆம் பாவகம் எனப்படும் களத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9ஆம் பாவகம் ஆகியவற்றை வைத்தே முடிவு செய்யலாம்.

செவ்வாய் கிரகம் தைரிய ஸ்தானத்தை குறிக்கும் ரத்தக் காரகன். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து காதல் தாகத்தை தீர்த்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆண், பெண் என்று யாராக இருந்தாலும், எந்த ஜாதகமாக இருந்தாலும் விருச்சிக ராசியில் மட்டும் செவ்வாய் இருந்தால் காதல் தாகம் அதிகமாகவே இருக்கும்.

காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் தனுசு ராசிக்காரர்கள் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எல்லாவற்றையும் விட காதல் தான் முக்கியமானதாக இருக்கும். ரிஷபம், துலாம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் அதிகம் காதலில் விழ வாய்ப்புள்ளது. ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் 7ஆம் இடம் திருமண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும். இந்த இடம், இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சமடையாமலும் இருப்பது முக்கியம். மிதுன ராசிக்கு நேர் எதிராக 7ஆவது ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் கூட்டணி இருந்து அந்த ராசியை பார்ப்பதால், கண்டிப்பாக காதலை புரபோஸ் செய்வார்கள்.

7ஆவது இடம் காதல் மற்றும் காமத்தை குறிக்கும். இதனை களத்திர ஸ்தானம் என்பார்கள். ஜாதகத்தில் 5, 7 மற்றும் 9 ஆகிய இடங்களை வைத்து தான் ஜாதகருக்கு காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட வாழ்க்கை அமையும். மேலும் இந்த 7ஆவது ஸ்தானத்தை வைத்து ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. 7ஆவது வீட்டில் கிரகமிருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை அமையும்.

ஒருவரது ஜாதகத்தில் 9ஆம் பாவம் மற்றும் அதன் அதிபதி பாதிக்கப்பட்டிருந்தாலும் குரு பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி கலப்புத் திருமணம் தான் அமையும். 12ஆவது இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம் மற்றும் இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். ஏனென்றால், காதல் மற்றும் காம சுகங்களுக்கு இந்த இடம் தான் முக்கியம். இந்த இடத்தை நீச்ச, பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது.

ஆண் ஜாதகருக்கு லக்னத்தில் ராகு கேது இருந்து 10ஆவது ஸ்தானத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி கிடைப்பார். 7ஆவது வீட்டில் நீச்ச கிரகமிருந்தால் சபல புத்தி உண்டாகும். இதுவே 7ஆவது வீட்டில் சனி – சுக்கிரன் சேர்க்கை இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு தான் உண்டாகும். ஜாதகத்தில் கிரக நிலைகளின் சேர்க்கை வைத்து தான் அவர்களுக்கு காதல், திருமண வாழ்க்கை அமைகிறது.