வாய்பேச இயலாத சிறுமியை பேசவைத்த வரதராஜ பெருமாள்

0 30

தலவரலாறு:

 எம்பெருமாள் வடிவங்கள் எண்ணற்றவை. இதில் அபூர்வமாக விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள மோ.வன்னச்சூர் கிராமத்தில் கோமுகி நதி வடகரையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 வாய்பேச முடியாத சிறுமி தினமும் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கிவிட்டு அங்குள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பது வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒருநாள் ஆடுகளை கோவில் அருகில் மேய்த்துக் கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் பெருமாள் சிறுமி முன் தோன்றி வாய்பேச முடியாத அந்த சிறுமியின் நாக்கில் தேனை தடவினார். சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு பேச்சு சரளமாக வந்தது. இதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் இதனைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து பெருமாளை வழிபட்டனர். இப்போதும் பெருமாளுக்கு சனிக்கிழமை தோறும் தேனால் அபிஷேகம் செய்து வாய்ப்பேச முடியாதவர்களுக்கும் திக்குவாயாக உள்ளவர்களுக்கும் நாக்கில் தேன் தடவுவது வழக்காக உள்ளது.

 500 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயிலை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கடந்த 27.08.2015ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர். கோவில் முன்பு கொடிமரம் உள்ளே சென்றதும் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மரை வணங்கிவிட்டு மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்கலாம். மேலும் குழந்தை பாக்கியம், வெளிநாடு செல்பவர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவற்றிற்கு பரிகாரமாக உத்தமர் வரதராஜ பெருமாளை வணங்கிவிட்டு செல்கின்றனர்.

 ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. விசேஷ நாட்களில் சுவாமிக்கு அலங்காரம் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஆவனிமாதம் கிருஷ்ணஜெயந்தி திருவீதியுலா, புரட்டாசி மாதம் திருவீதியுலா, மார்கழி ஏகாதசி திருவீதியுலா. இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த இக்கோவிலுக்கு தற்போது திருமண மண்டபம் கட்டும் பணிநடைபெற்று வருகின்றது. பக்தர்கள் கோவில் கட்டுமான பணிக்கு பணமாகவோ பொருளாகவோ கொடுக்க நினைப்பவர்கள்

தொடர்புக்கு:

 ராமதாஸ், கோவில் தர்மகர்த்தா – 9787686407

 சுதாகர் – 9787630097

அமைவிடம்:

  கள்ளக்குறிச்சியிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் மாமந்தூர் கைக்காட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒரு கி.மீ. தூரத்தில் மோ.வன்னஞ்சூர் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.