வாழ்வை வளமாக்கும் வரலட்சுமி நோன்பு

0 212

  லட்சுமி தேவியை வழிபடும் சிறப்புமிகு விரதம் ‘வரலட்சுமி நோன்பு’ திருப்பாற்கடலை கடைந்த போது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரை மகா விஷ்ணு காதலித்து மணந்து கொண்டார். தர்மங்களை காப்பதற்காக அவதாரங்கள் எடுத்த போது, அவரோடு பல வடிவங்கள் எடுத்தார். திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தை இன்று  ஆடி வெள்ளிகிழமை கடைபிடிப்பார்கள்

திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம்:

  பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடை பெறும்.  சுமங்கலி பெண்கள் தம் குடும்பம் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழவும், செல்வங்கள் பெருக வேண்டும் என்றும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்றும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும், தேவியிடம் வரங்களை வேண்டி வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப் படுகிறது. என்னை துதித்து வரலட்சுமி விரதம் இருந்தால் இல்லத்தில் நான் வசிப்பேன்.

மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் வாழ்ந்த பெண் சாருமதி. இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல் இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார். ‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி விரதமுறையை கூறி அதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் படி கேட்டுக் கொண்டாள்.  அதை அப்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள் தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்கத் தொடங்கினர். விரைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்கத் தொடங்கினர். நாடு வலம் பெற்றது.

விரத முறை:

பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட்டு, வெள்ளை அடிக்க வேண்டும். வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதை அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தில் இரு பக்கங்களிலும் வாழைக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம். இலையை மலர்களால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

லட்சுமிக்கு மஞ்சள் ஆடை:

 ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு  முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். மலர்களால் அன்னையை அர்ச்சித்து, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

சுமங்கலி பெண்கள்:

 சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண் களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பாள் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்வே வளமாகும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.