வடமாத்தூரில் வளரும் சுயம்பு மாணிக்கவிநாயகர்

0 441

 திருவண்ணாமலை அடுத்துள்ள வடமாத்தூர் என்ற ஊரில் உளிபடாமல் உருவான விநாயகர் கோவில் உள்ளது. இங்கு சுயம்பு மாணிக்க விநாயகர் என்ற பெயரில் விநாயக பெருமான் அருள்பாலிக்கிறார்.இவரை மணமுருகி வேண்டினால் மணவாழ்க்கை அமையும் என்பதும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் தீராத நம்பிக்கை, மேலும் நவகிரக தோஷங்கள் விலகியும் கல்வியில் மேம்படவும் கடன் பிரச்சனைகள் தீரவும் சுயம்பு மாணிக்க விநாயகரை வழிப்படுகின்றனர், பிராத்தனை நிறைவேறியதும் சுயம்பு மாணிக்க விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.

சுயம்பு மாணிக்க விநாயகர்:

 வடமாத்தூரில் வாழ்ந்த நிலக்கிழார்  திரு.சீதாராமன் என்பவரின் கனவில் தோன்றிய விநாயகப்பெருமான், தான் தாங்கள் நிலத்திலேயே இருப்பதாக கூறினார். இந்த நிலையில் அந்த நிலக்கிழார் தனது நிலத்தை உழுதபோது, ஒரே அளவில் 1½ அடி உயரத்தில் 2 கற்கள் கிடைத்தன. பார்த்தபோது அது விநாயகர் உருவில் காட்சிதந்தது. பின்னர் அந்த விநாயகரை சிறு கோவிலில் நிர்மாணித்து ‘சுயம்பு மாணிக்க விநாயகர்’ என்று பெயரிட்டு வழிபட்டு வந்தார். மற்றொரு கல் அம்மன் மண்டபத்தில் வைத்து தினம் தோறும் பூஜீத்து வருகின்றனர்.

 இந்த விநாயகரால் ஊரில் பல நல்ல விஷயங்கள் நடைபெற்றதால், ஆலயத்தின் புகழ் பரவத் தொடங்கியது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தை விரிவுபடுத்த எண்ணம் கொண்டனர். அதன்படி விநாயகரை அவரது குடும்பத்தோடு, அதாவது சிவபெருமான், பார்வதி சன்னிதிகளோடு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன் படியே கோவில் பெரிய அளவில் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சிவபெருமான், ‘மதுரநாதீஸ்வரர்’ என்ற பெயரில் அருள்புரிகிறார். அம்பாளின் திருநாமம் மரகதாம்பிகை என்பதாகும்.

 இந்த ஆலயத்தின் முகப்பின் மேற்புறத்தில் விநாயகர், சிவன், பார்வதி மற்றும் முருகன் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததும் குளிர்ச்சியான ஒரு பெரிய வழிபாட்டுக் கூடம், பலி பீடம், 33 அடி உயர பித்தளை தகடுகள் வேயப்பட்ட கொடிமரம், நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளன.

மதுரநாதீஸ்வரர்:

 untitled-1222பக்தியோடு உள்ளே நுழைந்தால் இடதுபுறம் சுயம்பு மாணிக்க விநாயகர் சன்னிதி உள்ளது. அடுத்து நடுநாயகமாக லிங்கத் திருமேனியாக விளங்கும் மதுரநாதீஸ்வரர் சன்னிதியும், வலப்புறம் வள்ளி-தெய்வானையோடு பாலசுப்பிரமணியர் சன்னிதியும் இருக்கின்றன. இந்த சன்னிதி விமானங்கள் மூன்றும் சோழர் கால பாணியில் கட்டப்பட்டு, சுதை சிற்பங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன,நவக்கிரக தோஷங்கள் விலகும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ,மகாலட்சுமி, மரகதாம்பிகை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, நவக்கிரக சன்னிதி, யாகசாலை, இறுதியாக சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சிதரும் கால பைரவர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

 இக்கோவிலின் தலவிருட்சமான வில்வ மரம் பிரமாண்டமாக பரந்து நிற்கிறது. தீர்த்தம் தீர்த்த குளமாக உள்ளது.ஆலயத்தின் பிரதான தெய்வமாக சுயம்பு மாணிக்க விநாயகர் விளங்கு கிறார். உளி படாமல் உருவான இந்த நாயகனை பலரும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இவரையும், கால பைரவரையும் ஒரு சேர வணங்கினால் நவக் கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அமைவிடம்:

 திருவண்ணாமலையிலிருந்து காஞ்சி, காரப்பட்டு செல்லும் சாலையில் பெரியகுளத்தில் இருந்து வடமாத்தூர் 3 கி.மி தூரத்தில் உள்ளது. திருவண்ணாமலை செங்கம் சாலையில் கண்ணக்குறிக்கையில் இருந்து 7-வது கி.மி தூரத்தில் உள்ளது.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.