வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை

0 213

வைகுண்ட ஏகாதசி வழிபாடு முறைகள்

  ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர். துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!’’ என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும்.

  விரத மகிமை வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்‘’ என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பட்சம் என்கிறோம். தேய்பிறை, வளர்பிறை ஆகிய இந்த இரண்டு பட்சங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும்.

  இதில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி என்று முன்னோர்கள் கூறுவர். ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் “சொர்க்கவாசல்” வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

 ஏகாதசி எனும் வடமொழிச்சொல் பதினொன்றாவது நாள் என பொருள்படும். அமாவாசை நாளில் இருந்து 11வது நாளில் வருவதால் வைகுண்டஏகாதசி என அழைக்கப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. வைகுண்டஏகாதசி தினத்தன்று இரவும் பகலும் கண்விழித்து விஷ்ணுவை வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பதும், வைகுண்டபதவி அடைய முடியும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கையாகும்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.