வராஹ அவதார மகிமை

0 32

வராஹ அவதார மகிமை !

  திரிவிக்ரம அவதாரம். உலகெல்லாம் அளந்து நின்றான் அந்த பிரம்மாண்ட ரூபத்தை பெரிது என்று கொண்டாடுகின்றோம். ஆனால் அந்த திரிவிக்ரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம்.

 உலகத்தை அளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி உலகின் மீது வைத்தான் அதே உலகத்தை வராஹ அவதாரத்தில் தன் மூக்கின் மேல் தரிக்கிறான் பகவான், ஆதலால் உலகம் பகவான் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது..

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம்
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே ஆண்டாள்

மானமில்லா என்றால், ‘அளவு’ பெருமை” எவ்வளவு என்று நிர்ணயிக்க முடியாதது,அப்படிப்பட்ட வராஹர் அவர். தாமரை புஷ்பம் போன்ற அவர் திருநேத்திரங் களே அந்த நாராயணன் ஸ்வரூபம் என்று சொல்லிக் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

அந்த வராஹ அவதாரிதான் விஸ்வாத்மா – ஜகத்துக்கு தலைவன், திரிவிக்ரமாவதாரத்தை விட பல கோடி மடங்கு நெடிய வராஹ வடிவமானான் பகவான்.

 விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலே “மஹா வராஹோ கோவிந்த” என்று வருகிறது.அதையே தான் சஹஸ்ர நாமத்தின் ஆரம்பத்தில் வரும் விச்வ சப்தமும் சொல்கிறது.

 ஹிரண்யாசுரனை சம்ஹாரம் பண்ணிய பரமாத்மா, பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வருகிறான்; கண்களை உருட்டுகிறான். பூமி பிராட்டி அந்த நேரத்திலே அழுது கொண்டிருக்கி றாள்.பகவானுக்கு வருத்தம்! காப்பாற்றுகிற நேரத்திலே அவள் அழுது கொண்டிருக்கிறாளே!

 தூக்கிவிட்ட பகவானை கொண்டாடி மகிழ்வதல் லவா வழக்கம். பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள்..? நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா? என்று கேட்கிறார் பகவான்.அதற்கு பிராட்டி கேட்கிறாள், நான் கூக்குரலிட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் பார்யை, சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா? என்று கேட்டாள்.

எத்தனை வித ரூபங்களில் பகவான் வந்தாலும், அவன் பேசுகிற பேச்சிலே மாற்றம் கிடையாது.பூமி பிராட்டிக்குப் பதில் சொன்னான்:

 இந்திரியங்கள் சரியாக இயங்கும் நிலையிலே, என்னுடைய விச்வரூபத்தை எவன் உணர்கிறானோ, அர்ச்சனை பண்ணுகிறானோ, என் திருநாமத்தை வாய்விட்டு உரக்கச் சொல்கிறானோ, என் திருவடியி லே எவன் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ, அவன் அழைக்கும் போது நான் ஓடோடி வருவேன்”.

 வராக சரமச்லோகம்.அந்திம காலம் என்பது மனிதர்களுக்கு கல் கட்டை மாதிரி விழுந்து கிடக்கும் நிலை வந்து விடும். அப்போது சரணாகதி பண்ண முடியுமா? சுற்றம் அவனைச் சூழ உட்கார்ந்து “சொல்லு, நீ பொருள் வைத்திருக்கிறாயா? ” என்று கேட்டுத் துளைக்கும். அவன் இதற்கு பதில் சொல்வானா?

 இல்லை நாராயணா என்று பகவான் நாமத்தைச் சொல்லுவானா? இத்தனை நாள் ஓடி உழைத்துப் பொருள் தேடியும் அதை எங்கே வைத்தோம் என்று அவனுக்கு நினைவு வரவில்லையே… அந்தச் சமயத்திலே பகவான் திருப்பெயரை அவன் எப்படிச் சொல்வான்?

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.