வருகிற சனிப்பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்களுக்கு இராஜயோகம்?

0 905

சனிப்பெயர்ச்சி 2017-2020 ஓர் கண்ணோட்டம் !

 நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக கருதப்படுவது சனிகிரகம் ஆகும். சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.

 கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தார். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதி முக்கியமான பதவியை வகிக்கின்றார். இவர் சு ரிய பகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார்.

Shanishchara Jayanti - Birth ceremonies of saturn

ஒரு கிரகம் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்கிறோம். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்கு இடம் பெயர்கின்றது. அதன்படி சனிபகவான் ஒரு இராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்வார். எனவே சனிபகவானின் பெயர்ச்சி காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

 திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 9ஆம் தேதி (26.10.2017) வியாழக்கிழமையன்று விருச்சக இராசியிலிருந்து தனுசு இராசிக்கு வந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.

 வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.12.17) செவ்வாய்க்கிழமையன்று விருச்சக இராசியிலிருந்து தனுசு இராசிக்கு சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சனிபகவானின் இந்த பெயர்ச்சியினால் எந்த இராசிக்கு எந்த விதமான தாக்கங்களை தரப்போகிறார் என்று பார்ப்போம்.

இராசிகளும் சனிபகவானின் தாக்கங்களும்!

மேஷம் – அஷ்டம சனி முடிவடைகிறது.
ரிஷபம் – அஷ்டம சனி ஆரம்பம்.
மிதுனம் – கண்டக சனி.
கடகம் – சனியின் பாதிப்பு இல்லை.
சிம்மம் – அர்த்தாஷ்டம சனி முடிவு.
கன்னி – அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்.
துலாம் – ஏழரை சனி முடிவு.
விருச்சகம் – பாத சனி.
தனுசு – ஜென்ம சனி.
மகரம் – விரய சனி.
கும்பம் – சனியின் பாதிப்பு இல்லை.
மீனம் – சனியின் பாதிப்பு இல்லை.

சனிப்பெயர்ச்சியால் யோகம் அடையக்கூடிய இராசிக்காரர்கள் :
தற்போது நடைபெறுகின்ற சனிப்பெயர்ச்சியில் மேஷம், கடகம், சிம்மம், துலாம், கும்பம் ஆகிய இராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது அனைத்து செல்வ செழிப்புகளையும் வாரி வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறது.

பரிகாரத்தின் மூலம் பலன் அடையும் இராசிக்காரர்கள் :

  ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய இராசிக்காரர்கள் பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த சனிப்பெயர்ச்சியில் பலன்களை பெறலாம்.

சனிப்பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்களுக்கு திருமண யோகம்?
மேஷம், சிம்மம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் திருமணம் யோகம் உண்டு.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.