வேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்

1 113

வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்

   கர்நடாக மாநிலம் மடிக்கரே மாவட்டத்தில் கூர்க் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் ஓம் காரேஷ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

omkareshwara-templeதங்களது வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் சிவபெருமானுக்கு நெய் விளக்கேற்றியும், புதுவஸ்திரம். சாற்றியும் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். திசை காட்டும் கருவி கோவில் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும் அதைச்சுற்றி ரிஷபங்களும் உள்ளன, குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும் திசை காட்டும் கருவியும் உள்ளது. கோவில் வாசலில் குளம், சுற்றிலும் மதிற்சுவர்கள் உள்ளன. படிகளில் ஏறியதும் வளைந்த வாசல் உள்ளது. அதன் கீழே இரு மணிகள் முழங்கப்படுகிறது. ஏறியவுடன் மூலவர் சன்னதி உள்ளது.

 கருவறை கதவின் சாளரங்கள் (ஜன்னல்) பஞ்சலேகத்தால் ஆனது பிரகாரசுவரில் புராண இதிகாச சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான் இந்த கோவிலை 1820-ல் ஆண்ட மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான். கொடுங்ளோலான அவன், தன் அரசியல் அபிலாஷைளுக்கா, நேர்மை மிக்க ஒரு அந்தணரைக் கொன்றான். அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது கனவிலும், நனைவிலும் வந்து மன்னனை வருத்து எடுத்தார் அந்தனர். சித்திரவாதை தாங்காத அவன் ஆன்மிக பெரியோர்களின் யோசனைப்படி, சிவனுக்கு கோவில் கட்டினான், அங்கு காசியில் இருந்து லிங்கத்தை கொண்டு வந்த லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்தான்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.