ஆன்மிக சாம்ராஜ்யத்தில் ஸ்ரீ நாராயணியே மறுஅவதாரமாக தோன்றி அற்புதங்கள் நிகழ்த்தும் ஞானகுரு சக்தி அம்மா”
“உலகம் என்பது மக்களின் ஒரு குழுமம் அல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் ஓர் உலகம். நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் முதலில் உங்கள் மனதை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மனமாற்றம் உலகத்தை மாற்றிவிடும்” – ஸ்ரீ சக்தி அம்மா.
நாடாண்ட மன்னர்கள் மக்களுக்கு இறைவழிபாட்டை உணர்த்தவும், தர்ம நெறிகளை கடைபிடிக்கவும் இமயம் முதல் குமரி வரை கோவில்களைக் கட்டி வழிபட உணர்த்தினர். ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய கோவில்களில் கலைநயமிக்க சிற்ப வேலைபாடுகளுடன் கற்கோயில்கள் கட்டப்பட்டது.
கோவில் கல்வி பண்பாட்டு மையம்:
‘சோழப் பேரரசு காலத்தில் கோயில்கள்’ மிகப்பெரும் பண்பாட்டு மையமாக திகழ்ந்தது. அங்கே சிவதர்மம் படிக்கப்பட்டது. பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது. சிறார்கள் இசைப்பள்ளியும் நடத்தப்பட்டன. கோவில் ஓர் பண்பாட்டு மையமாக மட்டும் திகழாமல் பசிப்பிணி தீர்க்கும் மருந்தாகவும் அந்நாளில் விளங்கியது. ஆனால் இன்று பல கோயில்கள் இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்தும் பல கோயில்கள் மண்மேடாகியும் விட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சாதித்த மாமன்னர்களின் தர்ம நெறிகளையும் ஆன்மீகத்தையும் மக்களுக்கு போதிக்கும் மறுஅவதாரமாக தோன்றி ஞானகுருவான ஸ்ரீ சக்திஅம்மா ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி தகதக தங்க கோவிலை கட்டி உலக சாதனைபுரிந்துள்ளார்.
தனக்காக வாழாமல் சமுதாயத்திற்காக வாழும் ஸ்ரீ சக்திஅம்மா:
ஆன்மீகப்பணி, சமுதாயப் பணி, மருத்துவ பணி என்று ஒவ்வொரு வினாடியும் இந்த உலகத்தை முன்னேற்ற சிந்தித்து செயல்பட்டுவரும் ஸ்ரீ சக்திஅம்மா உருவாக்கியுள்ள பிரமாண்டான ஆன்மீக அதிசயம் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பொற்கோவில் பிரமிக்க வைக்கும் பண்டைய கால கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது.
தங்க கோவில் அமைப்பும் சிறப்பும்:
மூலவரான அன்னை லட்சுமி நாராயணி 9 அடி உயர விக்கிரகமாக அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மஞ்சள் நிறத்தில் தகதகவென்று மின்னும் தங்கக்கோவில், ராஜகோபுரம் 48 அடி உயரத்தில் 5 நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கருவறை, மகாமண்டபம், வசந்த மண்டபங்கள் உள்ளன. தங்கத்தால் ஆன இந்த மூன்று மண்டபங்களில் கலைநயமிக்க சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய 50க்கும் மேற்பட்ட பிரமாண்டமான தூண்கள் தாங்கி நிற்பது காண்போரை வியக்கவைக்கிறது. தங்க கோவிலை சுற்றி 9 அடி ஆழத்தில் குளம் வெட்டப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் நிறப்பப்பட்டு மின் விளக்குகளின் ஒளி, தங்க கோவிலின் பிம்பம் தகதகவென மின்னுவது காண்போரை மெய்மறக்கச் செய்கிறது.
தங்கக்கோவிலை தரிசிக்க பக்தர்கள் நடந்து செல்லும் நட்சத்திர வடிவான நடைபாதை 13 வளைவுகளுடன் அமைக்கப்பட்டு சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று கோவிலை அடையலாம். நட்சத்திர வடிவிலான பாதையின் இருபுறமும் ஸ்ரீ சக்திஅம்மாவின் உபதேசமான ‘ ஸ்ரீ சக்திகீதை’ வாசகங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
ஸ்ரீபுரம் நாராயணி பீடம் உலகம் போற்றும் வகையில் பல நல்ல செயல்திட்டங்களைச் செய்கிறது என்றால் அந்த வெற்றிக்கான பின்னணியில் ஒரு ரகசியம் உண்டு என்றால் அது ஸ்ரீ சக்திஅம்மாவின் சக்திவாய்ந்த பூஜையே.
ஸ்ரீபுரம் பொற்கோயில் காசால் பணத்தால் உருவாக்கப்பட்டதல்ல. எல்லாம் வல்ல அன்னை ஸ்ரீ நாராயணி ஆனந்த நிலையில் உருவானதுதான் ஸ்ரீபுரம். ஒவ்வொரு நாளும் சுமார் 10 மணிநேரம் ஸ்ரீ சக்திஅம்மா பூஜை செய்து வருகிறார். சுயம்பு சன்னதி வழிபாடு, நாராயணி சன்னதி வழிபாடு, ஆதி நாராயணி சன்னதி வழிபாடு, புற்று நாராயணி சன்னதி வழிபாடு, துளசி பூஜை, சூரிய பூஜை, கஜபூஜை, அசுவபூஜை, கோபூஜை, ஸ்ரீமங்கல நாராயணிக்கு 27 வகையான அபிஷேகங்களுடன் ஆராதனை பூஜையும் ஸ்ரீ சக்திஅம்மா பூஜை செய்து வருகிறார்.
ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் ஸ்ரீ சக்திஅம்மா உருவாக்கியுள்ள 2வது சிருஷ்டி செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ சுவர்ணலட்சுமி… அன்னை மகாலட்சுமிக்கு 70 கிலோ தங்கத்தில் விக்கிரகத்தில் உருவாக்கி ஸ்ரீ சுவர்ணலட்சுமி என்ற திருநாமத்துடன் ஸ்ரீ சக்திஅம்மா பிரதிஷ்டை செய்துள்ளார். உலகிலேயே 70 கிலோ தங்கத்தில் ஸ்ரீ மகாலட்சுமிக்கு விக்கிரகம் உருவாக்கியிருப்பது ஸ்ரீபுரம் தங்கக்கோயில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்களே செய்யும் துளசி அபிஷேகம்:
ஸ்ரீ சுவர்ணலட்சுமிக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் துளசி தீர்த்த அபிஷேகம் செய்து வழிபடும் பாக்கியத்தை இக்கோவிலில் ஸ்ரீ சக்திஅம்மா அருளியிருக்கிறார். இத்துடன் அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் கோமாதாவின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 150 கிலோ வெள்ளியில் தங்கக்கோவிலில் ஸ்ரீ சக்திஅம்மா பிரதிருஷ்டை செய்துள்ளார்.
அன்று… வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வல்லளார்.
இன்று… பாறை மலையாக இருந்த திருமலைக்கோடி கைலாசகிரிமலை, இன்று பசுமை மலையாக மாறியிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் மரம் வீதம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை இந்த கைலாசகிரிமலையில் ஸ்ரீ நாராயணிபீடம் சார்பில் நடச்செய்து, திருமலைக்கோடியை பசுமைத் தலமாக உருவாக்கி மாமன்னர் அசோகரின் இயற்கையை நேசிக்கும் ஈர நெஞ்சம்போல் இன்று சக்தி அம்மா விளங்குகிறார்.
இன்றைய ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்கக்கோயில் அமைக்க பூமிபூஜைக்கு பிறகு ஸ்ரீ சக்திஅம்மா செய்த முதல் திட்டம்?
100 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் எந்தெந்த இடங்கிளல் மரம், செடி கொடிகளை உருவாக்க வேண்டும் என்று வழிகாட்டி முதலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடச் செய்தார். இதனால்தான் ஸ்ரீபுரம் பொற்கோயிலை ‘ஸ்பிரட்சுவல் ஓசிஸ்’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.
ஸ்ரீ சக்திஅம்மாவின் ஆன்மீகமும் சமுதாயமும்:
ஜோதி ஸ்வரூபினி: சிதிலமடைந்த கோயில்ளை புனரமைப்பதற்காக உரிய ஏற்பாடுகள் செய்து கொடுத்து கும்பாபிஷேகம் வரை அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பதற்கே ஜோதி ஸ்வரூபினி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வித்யா நேத்ரம் திட்டம்:
ஆண்டுதோறும் மாணவ மாணவியர் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பான வெற்றி பெறுவதற்காக சரஸ்வதி யாகத்தினை நடத்தி ஆசீர்வதித்து, சுற்றுப்புற மாவட்டங்களில் முதலிடம் பெறும் மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம்.
ஆரோக்யா திட்டம் :
ஆரோக்கியா திட்டம் மூலம் உடல் ஊனமுற்றவர்கள் வாழ்வில் வளம் பெறவும், ஊனம் ஒரு குறையல்ல என்று அவர்கள் உள்ளம் திடம் பெறவும் மூன்று சக்கர சைக்கிள்கள், காது கேட்கும் கருவிகள், செயற்கை கை கால் உறுப்புகள், நடக்க உதவும் உபகரணங்கருவிகள் வழங்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.
கோசாலா:
கோசாலா என்னும் பசுக்காப்பகத்தினை அமைத்து பசுக்களைப் பராமரித்து அதன்மூலம் பெறப்படும் பால் ஏழைக் குழந்தைகளுக்கும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கல்யாணி திட்டம்:
வசதியில்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திருமண பந்தத்தை அனுபவிக்க உதவுவதற்காக கல்யாணி திட்டம்.
புனர்ஜென்மா திட்டம்:
சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்து சட்டத்தின் முன் குற்றவாயியாக தண்டனை பெற்றுவருபவர்களை சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வில் ஒளியேற்றும் நோக்கத்தோடு புனர்ஜென்மா திட்டம்.
மாத்ரு கங்கா திட்டம் :
தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதற்காக மாத்ரு கங்கா திட்டம்
காடு வளர்ப்பு திட்டம் :
காடு வளர்ப்புத் திட்டத்தின் மூலம் மலைகள், சமவெளிகள், சாலையோரங்கள் என பல இடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு
பராமரிக்கப்பட்டுவருகிறது.
• கோவில் பூசாரிகள் மாநாடு கூட்டப்பெற்று முறையாக தெய்வத்தை பூஜிக்கும் நெறிமுறைகளை பற்றி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
• ஸ்ரீ நாராயணி சேவா உருவாக்கி அதன்மூலம் தினமும் பகல் வேளையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை முதல் இரவு வரை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது
• ஸ்ரீ லட்சுமி நாரயணி கோயில் வளாகத்தில் தினமும் காலையும் மாலையும் ஸ்ரீசூக்த ஹோமமும், ஸ்ரீநாராயணி பீடத்தில் ஸ்ரீ நாராயணி யாகமும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
• அமாவாசை நாட்களில் ஸ்ரீபுரம் ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் வளாகத்தில் ஸ்ரீசண்டியாகம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
• ஆண்டுதோறும் 10008 பேர்களுக்கு சேலைகள், வேஷ்டிகள் வழங்கும் வஸ்திர தானம் திட்டத்தினை ஞானகுரு ஸ்ரீ சக்தி அம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறார்.
ஆலய அமைவிடம்: வேலூரிலிருந்து ஸ்ரீபுரம் 10வது கி.மீ. தூரத்தில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி மற்றும் ஷேர்ஆட்டோ வசதியும் உண்டு.
தொடர்புக்கு 91+0416 2206500 (10 லைன்ஸ்)
