Tuesday, October 17, 2023
HomeAalayangalஅன்னகாமாட்சி அம்மன் கோயில்!

அன்னகாமாட்சி அம்மன் கோயில்!

அருள்மிகு அன்னகாமாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகளை காண்போம்…

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டத்தில் வைரிசெட்டிபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது அன்னகாமாட்சியம்மன் கோயில்.

ஆலயத்தின் சிறப்பு:

அன்னகாமாட்சி அம்மன் என்று போற்றப்படும் இக்கோயிலின் மூலவர் பெருமாள் ஆவார். அன்னகாமாட்சியம்மன் மற்றும் சப்த கன்னிமார்கள் கருவறையிலேயே அருள்பாலிக்கின்றனர் இவ்வாலயத்தின் மூலவர்.

ஆலய அமைப்பு:

கோயிலின் பிரதான வாசலில் சிவபெருமான், பார்வதி மற்றும் இரு குழந்தைகளான முருகன் மற்றும் விநாயகருடன் காட்சிதருகிறார். இவ்வாலயத்தில் உள்ள மாசி பெரியசாமி சிவாம்சமானவர் என்பதால் இவ்வாறு சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாசலின் நேரே மூலவர் சந்நிதி அமைந்துள்ளது.
இக்கோயிலின் மூலவராக திருமகள், பூமாதேவி உடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். மூலவரின் வலப்புறத்தில் மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி ஆகியோர் மண் கலய உருவங்களாகக் காட்சிதருகின்றனர். கருவரையில் பத்துக்கும் மேற்பட்ட தெய்வங்கள் குடிகொண்டிருந்தாலும், பூசாரிகள் மற்ற தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டுவது இல்லை.

ஆலயத்தின் இதற சன்னதிகள்:

இக்கோயிலில் வெள்ளையம்மாள், வைரசெட்டி, வீரபத்திரன், காத்தவராயன், உதிர கருப்பு போன்ற எண்ணற்ற நாட்டார் தெய்வங்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருப்புசாமி இங்கு புல்லாங்குழல் ஊதுவது போல காட்சிதருகிறார். இவரை முத்து கருப்பண்ணசாமி என்று அழைக்கப்பட்டு வருகின்றனர் பக்தர்கள்.
இங்குள்ள கன்னிமார்களும் உருவ வடிவில் இல்லாமல் மண் கலய வடிவிலேயே காட்சிதருகின்றனர். இக்கோயில் மூலவராக பெருமாள் இருந்தாலும், சிவன் கோயிலாகவே இது அறியப்படுகிறது. உற்சவ காலங்களில் சிவன், அம்பிகை வாகன ஊர்வலம் நடக்கிறது. இக்கோயிலை அன்னகாமாட்சியம்மன் என்றே அழைக்கிறனர்.

மாசி பெரியசாமி:

உள்ளிருக்கும் சந்நிதியில் மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மீது ஒரு காலை ஊன்றியும் மற்றொரு காலை தரையில் ஊன்றியும் காட்சி கொடுக்கிறார். அவருடைய வலதுகையில் இருக்கும் வேல் வேங்கையைக் குத்தியவாறும், இடது கையில் தண்டாயுதத்தினை தரையில் ஊன்றியும் இருக்கிறார். அவரின் இருபுறமும் இரு முனிவர்கள் உள்ளார்கள்.

மாசி பெரியசாமி கருந்தாடி மற்றும் முறுக்குமீசை வைத்துள்ளார். நெற்றியில் திருநீற்று பட்டையும், அதில் குங்குமம் இடப்பட்டுள்ளது. வழிபடும் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீரு தரப்படுகிறது. அவருடைய சந்நதியிலேயே அவருக்கு வலது பக்கத்தில் லாட சன்னியாசி அமர்ந்துள்ளார். மேலும், பிரகாரத்தில் அமைந்துள்ள சிறுதெய்வங்களுக்கான சந்நிதிகள். இது வீரபத்திரர் கன்னிமார்கள் சந்நிதியாகும்,

வைரிசெட்டி சன்னதி:

இக்கோயிலில் எண்ணற்ற நாட்டார் தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. மூலவர் அருகே அன்னகாமாட்சியோடு சப்த கன்னிமார்கள் இருந்தாலும் தனிச் சந்நிதியிலும் சப்த கன்னிமார்கள் உள்ளார்கள். காத்தவராயன், வெள்ளையம்மாள், மருதைவீரன், முனிகள், கருப்புகள் ஆகியவர்களோடு இத்தளத்திற்கு வைரிசெட்டி எனப் பெயர் வரக் காரணமான செட்டியாருக்கும் தனிசந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − two =

Most Popular