Sunday, October 22, 2023
HomeAalayangalகுருசாமிபாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்!

குருசாமிபாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்!

குருசாமிபாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்!

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் என்ற ஊரில் உள்ள கோயில் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில். இந்தக் கோயிலில் சிவசுப்பிரமணிய சுவாமி மூலவராக காட்சி தருகிறார். வள்ளி, தெயானை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம், மாசி மகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை தீபம் ஆகிய நாட்கள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் மட்டும் சிவசுப்பிரமணிய சுவாமி, பாலதண்டாயுதபாணி என்று 2 மூலவர்கள் இருப்பது தனிச்சிறப்பு. இங்கு ஏகாம்பரேஸ்வரர், வல்லப கணபதி, துர்க்கை அம்மன், சனீஸ்வரர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி சிவசுப்பிரமணியரை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும். அதுமட்டுமின்றி திருமண பாக்கியம் கிட்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்கு வந்து சிவசுப்பிரமணியருக்கு பொங்கல் வைத்து, அன்னதானம் செய்தும், நிவர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர். ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாளின் போது முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் தங்களது கையால் முருகப் பெருமானுக்கு மாலை சாற்றி வழிபட விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வந்து சிவசுப்பிரமணியருக்கு பொங்கல் வைத்து, அன்னதானம் செய்து வழிபட அந்த வருடமே விளைச்சல் அமோகமாக இருக்கும். அதுமட்டுமா, சந்ததியும் செழிக்கும் என்பது ஐதீகம்.

முருகப் பெருமானின் படை வீரர்களின் தளபதி வீரபாகு. இவர், இந்தக் கோயிலில் பால தண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து வழிபட்டார். இதில் மனமகிழ்ந்த முருகப் பெருமான் வீரபாகுவிற்கு இங்கு காட்சி அளித்தார். அதன் பிறகு வீரபாகுவின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் முருகப் பெருமானின் தரிசனம் தந்த இடத்தில் சிறிய அளவிலான கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

இங்கு மட்டும் சிவசுப்பிரமணிய சுவாமி, பாலதண்டாயுதபாணி என்று 2 மூலவர்கள் இருப்பது தனிச்சிறப்பு. குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

Most Popular