புதுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது புல்வயல் கிராமம்.இந்தக் கிராமத்துக்கு அருகே காணப்படும் குன்றின் மீது அமைந்திருக்கிறது,குமரமலை #பாலதண்டாயுதபாணி திருக்கோவில் ஆகும்.
பார்ப்பதற்கு மிகச்சிறிய மலையாக இருந்தாலும் கீர்த்தியில் பெரிய மலையாகத் திகழ்கிறது குமரமலை.
இப்பகுதி மக்கள் பாலதண்டாயுதபாணியை சக்தி வாய்ந்த தெய்வம் என்று போற்றுகிறார்கள்.
குமரன் என அழைக்கப்படும் ஒரு மனிதர் ஒவ்வொரு வருடமும் பழனிக்கு காவடியைச் சுமந்து சென்றார்.இவர் புல்வயல் கிராமத்தை சேர்ந்தவர்.இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்தது.பக்தர் குமரனுக்கு வயதானது.காலங்கள் கடந்தன.இவருக்கு வயது அதிகமானதாலும்,உடல் தளர்வு ஏற்பட்டதாலும் பழனிக்கு செல்ல இயலாத சூழல் வந்தது.பழனிக்கு காவடியைச் சுமந்து செல்ல முடியாமையால் மிக்க வருத்தமடைந்தார்.கண்ணீர் துளிகள் உருள இவர் தூங்கினார்.#முருகன் கனவில் வந்து’நீ இங்கு வர வேண்டாம்!நான் இங்கு வந்து மலையில் உனக்கு காட்சி தருகிறேன்’ என்றார்.அவர் கனவில் வந்ததற்கு சாட்சியாக அவர் பக்கத்தில் விபூதி,ருத்ராட்சமாலை,ஒரு சிறு சங்கு செடி இருந்தது.
கனவில் வந்தவர் அவருக்கு ஒரு அறிவுரை வழங்கினார்.நீ அந்த இடத்தில் உன் காவடி பிரார்த்தனையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றார்.பக்தனுக்கு முருகன் கருணையை நினைத்து மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.அதே இரவில் முருகன் புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் கனவில் வந்து பக்தன் காவடி எடுக்க போவதாகவும் அந்த இடத்தில் கோவில் ஒன்று கட்டும் படியும் கூறினார்.மன்னர் மறுநாள் சென்று பார்த்த போது பக்தன் காவடி எடுப்பதை பார்த்தார்.அந்த இடத்தில் முருகன் கனவில் வந்து கூறிய படி கோவில் கட்ட ஏற்பாடு செய்தார்.
முக்கிய கடவுள் முருகன் மற்ற கடவுள்கள் விநாயகர் தட்சிணாமூர்த்தி,ஐயப்பன்,நவகிரகம்,இடும்பன் சன்னதி ஆக அமைத்து கோவில் கட்டுவித்தார்.
பழனி மலை முருகனுக்கு நிகரானவராக அருள்புரிகிறார் குமரமலை பாலதண்டாயுதபானி.ஆனால்,பழனி மலை முருகப் பெருமானைப் போன்று இடுப்பில் கை வைக்காமல்,கைகளைத் தொங்கவிட்டபடி அருள்பாலிக்கிறார்.மழித்த தலையுடன் இல்லாமல்,உச்சிக் குடுமியுடன் அந்தணரைப் போல் காட்சி தருவதும் சிறப்பு எனச் சிலாகிக்கின்றனர், இந்தப் பகுதி மக்கள்.
பழநி மலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் குமரமலை முருகனை தரிசித்துச் செல்கிறார்கள்.#ஸ்ரீபாலதண்டாயுதபாணியை மனதாரப் பிராத்தித்து,இங்கேயுள்ள மலையில்,பாதத்தை வரைந்து நேர்த்திக் கடன் செலுத்தினால், வாத நோய் நீங்கும் என்பது ஐதிகம்.பல கிராமங்களிலிருந்தும் பாதயாத்திரையாக வந்து பாலதண்டாயுதபாணியின் அருளைப் பெறுகிறார்கள்.
திங்கள்கிழமை,அமாவாசை,விசாகம் நட்சத்திரம்,கார்த்திகை நட்சத்திரம் ஆகிய நாள்களில் விரதமிருந்து முருகப் பெருமானை வணங்கினால் நினைத்த காரியங்கள் யாவும் நடைபெறும்.சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.சகல சௌபாக்கியங்கள் யாவும் கிட்டும்.
இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வளைகாப்பின் போது கோவில் அர்த்த மண்டபத்தில் உள்ள #வேலுக்கும் வளையல் சாத்தி வழிபடுகிறார்கள்.இதனால் சுகப் பிரசவம் கிட்டும் என்பது நம்பிக்கை.
கருணைக் கடவுளான #கந்தவேலை வணங்கினால் போதும்!!அவன் அருளால் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறும்.
#யாமிருக்க #பயமேன்
அன்பே #சிவம்
