Thursday, October 19, 2023
HomeAalayangalபேரூர் அங்காள பரமேஸ்வரி கோயில்!

பேரூர் அங்காள பரமேஸ்வரி கோயில்!

பேரூர் அங்காள பரமேஸ்வரி கோயில்!

தல சிறப்பு:

பொதுவாக சிவன் கோயில்களில் நந்தியும், அம்மன் கோயிலில் சிம்மமும் வாகனமாக அமைப்பார்கள். ஆனால் இந்த அம்மன் கோயிலில் சிம்மத்திற்குபதில் நந்தியை வாகனமாக அமைத்திருப்பது சிறப்பு.

திருவிழா:

ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அனைத்து அம்மன் கோயில்களை போல் இங்கும் பலவகை திரவியங்களால் அம்மனுக்குஅபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு விளக்கு பூஜைகள் நடக்கும். நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்களுக்கும் ஒன்பது வகையான அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடக்கும்.

பொது தகவல்:

பல ஆண்டுகளுக்கு முன்னர், இக்கோயிலில் உள்ள பேச்சியம்மனேஒரு பெண்னுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழாவின் போது மக்கள் தீமிதி திருவிழாவே சாலையில் தான் நடைபெறுகிறது.பிரார்த்தனைமுக்கிய பிரார்த்தனையாக கல்யானம் ஆகாதவர்கள் விரைவில் கல்யானம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். இக்கோயிலில் பேச்சியம்மன்உள்ளது. பேச்சியம்மன் சிறந்த மருத்துவச்சி என்றும் கூறுகின்றனர். கர்ப்பினிப்பெண்கள் இங்குவந்து வேண்டுதல் வைத்தால் அவர்களுக்கு கட்டாயம் சுகப்பிரசவம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

தல பெருமை:

இவை தவிர, அம்மன் உருவம் படைத்துள்ள பாம்பு புற்றில் ஒரு கருநாகமும், கோதுமை நாகமும்உள்ளது. இந்த நாகங்கள் பக்தர்களின் பார்வையில் படுவதில்லை. ஆனால், அந்த கோயிலின் அர்ச்சகரின் கண்களில்பல முறை தென்பட்டுள்ளது. மேலும்அந்த பாம்புகள் இரண்டும் சுமார் 25 அடிக்கு மேல் இருக்கும் என்று அக்கோயில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

முக்கிய திருவிழாக்கள்:

சித்திரைக்கனி, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்க்கிழமை, நவராத்திரி, மார்கழி மாத சிறப்பு வழிபாடு, புரட்டாசி மாத விரத வழிபாடு ஆகிய நிகழ்வுகள் இக்கோயிலின் முக்கியத் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் சித்திரைக்கனியன்று அங்காளம்மனுக்கு பழங்கள் மற்றும் காய்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கும்.

தல வரலாறு:

இக்கோயிலில் பல விசித்திரமான நிகழ்வுகள் கூறப்படுகிறது. அதில் இந்த அம்மனுக்கான பெயர் காரணம் தான் வியக்கத்தக்கது. சிவனும் பார்வதியும் நொய்யல் ஆறு வழியாக செல்லும் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆழம் உள்ளதை பார்த்த பார்வதி, சிவனிடம் நாதா அங்கு ஆழம் எனக்கூறியுள்ளார். அதன் விளைவு தான் அங்காளம்மன் எனப்பெயர் புணர்ந்துள்ளது. இங்கு உள்ள அங்காளம்மன் பாறையால் சிலை வடிவம் அமைக்கப்படவில்லை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாம்பு புற்று ஒன்று இருந்தது. அந்த பாம்பு புற்றுக்கு மக்கள் பால் ஊற்றுவது வழக்கம். நாளடைவில் அந்த பாம்பு புற்றின் தோற்றம் அம்மனின் வடிவம்போல் காட்சியளிக்க துவங்கியுள்ளது. இதனை அடுத்து, அங்கு அம்மன் எழுந்தருளியதாக கருதப்பட்டு மக்கள் அந்த பாம்பு புற்றுக்கு மஞ்சள் பூசி வழிபட துவங்கியுள்ளனர். பின்னர் நாளடைவில் தோற்றம் வலு பெற துவங்கியதால், பக்தர்கள் சார்பில் சிலைக்கு கண் மலர்கள் உள்ளிட்டவை அமைத்து வழி படுகின்றனர். இன்றும் அங்காளம்மனின் சிலை வடிவம் மண்ணில் தான் உள்ளது. அதனை உடைத்து மறு சீரமைக்கவில்லை. மேலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்க்காக மட்டும் சிலை வடிவிலான ஓர் அம்மன் வைக்கப்பட்டுள்ளது.

விழாக்காலத்தில் மட்டும் அந்த சிலைக்கு அபிஷேகங்கள் செய்வர். இக்கோயிலுக்கு கரிகால சோழன் வந்ததாகவும் ஒர் வரலாறு உண்டு. ஆனால், காலப்போக்கில் அவ்வரலாறுகள் மறைந்துள்ளது. கோயில் மக்கள் வாழும் இடத்தில் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் கொலுசு சத்தம் கேட்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். இயற்கை சூழ்ந்துள்ள இடத்தில் அமையாவிட்டாலும் கூட, மக்களுக்கு பக்கபலமாக இருக்கும், மக்களுள் ஒருவராக கோயில் அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =

Most Popular