ஸ்ரீநிவாசமங்காபுரம்

646

திருமலை திருப்பதி தேவஸ்தான மேலாண்மைக் கீழ் செயல்படும் ஆலயங்களில் “ஸ்ரீநிவாசமங்காபுரம் ” கோவிலும் ஒன்று.

கலியுகத்தில் தர்மத்தைக் காக்க ப்ருகு மஹரிஷி முதலில் சத்யலோகம் சென்றார். பிரம்மனும் , சரஸ்வதியும் கண்டுக் கொள்ளவில்லை. அடுத்து கைலாசம் சென்றார். உமாமஹேஸ்வரரின் நிலைமை அதே வழி தான். இறுதியில் வைகுண்டத்திற்கு வந்தார். லக்ஷ்மி நாராயணரும் கண்டு கொள்ளவில்லை. கோபத்துடன் ப்ருகு மஹரிஷி பொறுத்துக் கொள்ளாமல் வேங்கடேஸ்வரரின் திருமார்பு மீது எட்டி உதைத்து விட்டார் மஹரிஷி.

இதை லக்ஷ்மி தேவி அவமானமாக பாவித்து வைகுண்டம் விட்டு பூலோகம் வந்து விட்டாள். அவரைத் தேடிக்
கொண்டு வந்தார் ஸ்ரீமந் நாராயணன். வைகுந்தம் களையில்லாமல் இருக்கிறது. விஷ்ணு லக்ஷ்மியை தேடிக்
கொண்டு வந்தார். பசி, தாகம் தாளாமல் ஒரு புற்றினுள் சேர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டார். அவரின் இந்த நிலைமையை பார்த்து பிரம்மாதி ருத்ரர்கள் பசு, கன்று குட்டியாக மாறி லக்ஷ்மியின் துணையுடன் பசுமாட்டுக் கூட்டத்துடன் சேர்ந்து தினமும் புற்றினருகில் சென்று பாலைச் சுரந்து பெருமாளின் பசியைத் தீர்த்தனர். இந்த சம்பவத்தைக் பார்த்த யாதவன் பசுவைக் கொல்ல முயன்றான். அந்த சமயத்தில் பசுவிற்கு விழ வேண்டிய அடியைக் காப்பாற்ற மேலெழுந்த விஷ்ணுவிற்கு பட்டது. விஷ்ணு யாதவனை சபித்து விட்டு
வராஹ க்ஷேத்திரம் சென்றார்.

அங்கு வராஹ சுவாமி தாயான வகுளா தேவியின் உதவியால் ஸ்ரீநிவாஸனாக மாறினார். வகுளா தேவியின் தாய்ப்பாசத்தை மறுபடியும் ருசி பார்த்த ஸ்ரீநிவாஸன் காட்டு வழிப்பாதையில் ஒரு நாள் ஆகாச ராஜாவின் மகளான ” பத்மாவதி தேவியை” பார்த்து காதலில் விழுந்தார். விஷயம் தெரிந்து கொண்ட வகுளாதேவி ஆகாச
ராஜாவிடம் சென்று விவாகம் சரி செய்து பேசுகிறார். முடிவில் பத்மாவதி , ஸ்ரீநிவாசனுடைய திருமணம் மிகவும் விமரிசையாக நடக்கிறது.

புதிய மணப்பெண்ணான பத்மாவதியை அழைத்துக் கொண்டு வராஹ க்ஷேத்திரத்திற்கு தெற்கு திசையில் உள்ள ஸ்வர்ணமுகி நதியின் கரையோரத்தில் எழுந்தருளியுள்ள ” ஸ்ரீ அகஸ்திய ” ஆஸ்ரமத்திற்கு வருகின்றனர். ஸ்வர்ணமுகி நதிகளின் திரிவேணி சங்கமமாக இந்த க்ஷேத்திரம் பிரசித்தி பெற்றது.

ஆனால் அகஸ்தியர் புதுமணத் தம்பதிகளை ஆறு மாத காலம் வரைக்கும் தீர்த்த யாத்திரை செய்வது கூடாது எனக் கூறுகிறார். அவரின் பேச்சுப்படி ஸ்ரீநிவாசன் தன் பிரயாணத்தை நிறுத்திக் கொண்டு அங்கேயே இருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு ” ஸ்ரீநிவாசமங்காபுரம் ” கால்வழிப் பாதையின் மூலமாக பத்மாவதியை அழைத்துக் கொண்டு திருமலைக்கு சென்றார் என்பது ஐதீகம்.

அலமேலுமங்கையான பத்மாவதி தேவியுடன் ஆறு மாதங்கள் தங்கி அருள் செய்த தலமாகவும் , பக்தர்களின் கோரிக்கையின் பேரில் ஸ்ரீநிவாசமங்காபுரம் க்ஷேத்திரத்தில் ” கல்யாண ஸ்ரீநிவாஸனாக ” எழுந்தருளியதாலும் இந்த க்ஷேத்திரம் ” ஸ்ரீநிவாசமங்காபுரம் ” என்று போற்றப்படும்